நடிகரும், இந்திய ஜனநாயகப் புலிகள் தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், வேலூருக்கு சென்ற மன்சூர் அலிகான் அங்கு மக்களை சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொழுது திமுகவை சேர்ந்தவர்களை சரமாரியாக வசைப்பாடி உள்ளார்.
செய்தியாளர் ஒருவர் வேலூரில் பிரதான பிரச்சனையாக பாலாறு உள்ளது, நீங்கள் இங்கு தான் போட்டியிடுகிறீர்கள் மக்களுக்கு என்ன வாக்குறுதி கொடுக்கிறிங்க என்ற கேள்விக்கு, பதிலளித்த மன்சூர் அலிகான் என்னை எம்பியாக்குங்கள் ஆறு மாதத்தில் நான் அந்த பிரச்சனையை மாற்றி தருகிறேன் வெடிகுண்டு வைத்து உடைத்து தள்ளுகிறேன் என கூறினார். ஆந்திரா அரசு 22 அணைகளை கட்டியுள்ளது. இதற்கு யார் அனுமதி கொடுத்தது இயற்கையா செல்லக்கூடிய தண்ணீரை எதற்காக அணை கட்ட விடுங்க மிஸ்டர் துரைமுருகன், எம்பி கதிரானந்த் அவர்களே எதற்காக பாலாற்றில் அணைகட்ட விட்டீர்கள். நீங்கள் இங்கு மணலை அல்லி அணிந்து மாநிலத்திற்கும் விற்று விட்டீர்கள் அதன் காரணமாகவே இபிகோ அணை கட்ட முன்வந்துள்ளது மற்ற மாநிலம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படிப்பவர் எல்லாம் கஞ்சா குடிக்கிறார்கள். ஹெல்மெட் இல்லாமல் போனால் லைசன்ஸ் எடு என்று நிப்பாட்டும் போலீசார், போதைப் பொருள் விற்பவரின் இரண்டு பேரின் தலையை வெட்டுங்கள். அப்படிப் பார்த்தால் அரசாங்கத்தின் தலையையே வெட்ட வேண்டும். முதலில் டாஸ்மாக்கை நிப்பாட்டுங்கள், தூக்கி போடுங்கள். என்று கடுமையாக தமிழக அரசி தாக்கி பேசினார். எம்பி கதிரானந்த் செயல்பாடுகள் எப்படி இருக்கு என்ற கேள்விக்கு நீங்கள் தான் சொல்லவேண்டும் அவர் நல்லது செய்தால் நான் எதற்கு வரப்போகிறேன் எதற்கு கட்சி தொடங்கப்போகிறேன் என கூறியுள்ளார். முன்னதாக சினிமா துறையை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.