![Jaffer sadhik](https://www.tnnews24air.com/storage/gallery/ZEuIOWHAgyGIaHum5iEMiCGrEO3ZhFCtsKBAQhyh.jpg)
கடந்த ஒருவாரமாக உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் போதை பொருள் கடத்தல் வழக்கில் தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்தார். திமுகவில் அவர் அயலக பிரிவில் இருந்தார் உடனே அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் தற்போது அதிரடியாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்திய சோதனையின் போது போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான 50 கிலோ ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்தனர். அதிலும், தமிழ் சினிமா துறையின் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் முக்கிய குற்றவாளியாக தேடிய நிலையில் தலைமறைவானார்.
இதையடுத்து அவரது வீட்டிற்கு மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார் அவரது வங்கி கணக்குகள் எல்லாம் முடக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் 4500 கிலோ போதை பொருள்களை கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2000 கோடி மதிப்பிலான போதை பொருள்களை இந்தியா, ஆஸ்திரேலிய உள்ளிட்ட வெளிநாடுகளில் கடத்தியதாக கூறப்பட்டது. தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் மீண்டு வருவாரா அடுத்த கட்டத்திற்கு எப்படி போகும் என எதிர்பார்த்த நிலையில், தமிழக போதை பொருள் அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழக அதிகாரிகளின் தகவலை அடுத்து டெல்லி என்சிபி (போதை பொருள் தடுப்பு அதிகாரிகள்) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்தனர். அவரை விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அது போல் அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிகிறது. கடந்த மாதம் லுக் அவுட் நோட்டிஸ் ஜாபர் சாதிக்கின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளதால் அவர் வெளிநாடு செல்லுவார் என்றும் சில தகவல் வந்தது. தீவிர கண்காணிப்பில் இருந்த ஜாபர் சாதிக்கை திட்டம் போட்டு அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் சினிமா துறையை சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதிலும் இயக்குனர் அமீர் நெருக்கத்துடன் இருந்தார் என்று தெரியவந்தது. இந்நிலையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு தொடர்புள்ளதாக NCB அதிகாரிகள் தெரிவித்தனர். போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை ஜாபர் சாதிக் தமிழ், ஹிந்தி சினிமா வட்டாரத்தில் முதலீடு செய்துள்ளதன் மூலம் பலருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். அமீர் உள்ளிட்டோரிடம் விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.
ஜாபர் சாதிக் கைது செய்ததன் மூலம் தமிழகத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் பலரும் சிக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஜாபர் அமைச்சர் உதயநிதியுடனும் முதலமைச்சர் ஸ்டாலின் உடனும் நெருக்கத்தில் இருந்து பல்வேறு நிவாரண தொகைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் அமைச்சர்களின் ஊழல் வழக்கு மற்றும் மணல் கொள்ளை விவகாரம் தாண்டி இந்த போதை பொருள் விவகாரம் திமுகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.