24 special

அண்ணாமலை கொடுத்த பெட்டியால் சிக்கபோகும் பல அமைச்சர்கள்...!

Annamalai
Annamalai

தமிழகத்தில் அண்ணாமலை அவர்கள் நாளை என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை சிறப்பாக மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக பாஜக தரப்பில் முழு ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னர் DMK பைல்ஸ் இரண்டாம் பாகத்தை தங்கள் வெளியிட்ட பிறகுதான் நடைபயணத்தை துவங்குவோம் என்று அண்ணாமலை சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அனைவரும் எதிர்பார்த்தபடி நேற்று அண்ணாமலை அவர்கள், பாஜக மூத்த தலைவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என் ரவி அவர்களை சந்தித்து இது பற்றி விளக்கங்களை அளித்ததாகவும், அவரிடம் DMK பைல்ஸ் பாகம் 2 ஒப்படைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


அதன்படி நேற்று, ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.அடுத்தகட்டமாக பாகம் இரண்டில் பினாமிகளின் நில விவரங்கள், அவர்களின் பெயரில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தாக குறிப்பிட்டுள்ளார். அது மட்டும் கிடையாது அண்ணாமலை அவர்கள் தன்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் DMK பைல்ஸ் பாகம் 2 என்பதை வெளியிட்டதோடு மட்டுமல்லாது, வீடியோவையும் நேற்று வெளியிட்டு இருக்கிறார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுவது இருக்கிறது. 

அண்ணாமலை அவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து, என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை ராமநாதபுரத்தில் இருந்து துவங்க இருக்கிறார்.பெரும்பாலான இளைஞர்கள் அண்ணாமலையோடு அங்கே இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த யாத்திரை பயணத்தில் மக்களிடம் திமுகவின் முகத்திரைகளை கிழிக்கும் விதமாக இந்த ஒரு டிஎம்கே பைல்ஸ் பாகம் ஒன்று மற்றும் பாகம் 2 குறித்தும் அதில் இருக்கும் விவரங்கள் குறித்தும் நிச்சயம் பேசுவார் மக்களுக்கு இது பற்றிய புரிதல்களை கொண்டு வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அவர்கள் தன்னுடைய twitter பக்கத்தில் கூறும் பொழுது, அண்ணாமலை அவர்கள் மிகவும் விரிவாக ஆளுநர் அவர்களிடம் ஆதாரத்துடன் கனகச்சிதமாக ஒப்படைத்து இருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் சவுக்கு சங்கர் கூறும்போது, 'தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் 6 பேருக்கு சொந்தமான பினாமி நிறுவனங்கள், பெரிய விவசாய நிலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்டவை தொடர்பான ஆதாரங்களை தமிழக ஆளுநர் ரவியிடம் அளித்துள்ளார், இது குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படலாம், ஆதாரங்களில் புகைப்படங்கள், நிலத்தின் ஆவணங்கள், ஆர்ஓசி, வங்கி அறிக்கைகள் போன்றவை அடங்கும். ஏற்கனவே இரண்டு திமுக அமைச்சர்கள் ED விசாரணையில் உள்ளனர் மற்றும் ஒருவர் நீதிமன்ற காவலில் உள்ளார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அவர் கூறுவது போல ஏற்கனவே இரண்டு அமைச்சர்கள் தற்போது அமலாக்கத்துறை விசாரணையின் கீழ் தான் இருந்து வருகிறார்கள் அது மட்டும் கிடையாது, குறிப்பாக அதில் ஒரு அமைச்சர் தற்போது புழல் சிறையில் காவலில் இருந்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் பாகம் 2 என்பதை வெளியிட்டு அண்ணாமலை அவர்கள் அறிவாலய வட்டாரங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஆதாரங்களையும் வெளியிட்டு இருக்கிறார். இதன் காரணமாக தற்பொழுது திமுக வாழ்நாள் பயத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது எப்படியும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இந்த அமைச்சர்கள் அமலாக துறையின் விசாரணையில் சிக்குவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.