திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவருக்கு 17 வயதில் சின்னத்துரை என்ற மகனும், 14 வயதில் சந்திரா செல்வி என்ற மகளும் உள்ளனர் சின்னத்துரை வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 12-ம் வகுப்பும், சந்திரா செல்வி 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்,கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சின்னத்துரையும் சந்திரா செல்வியும் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பினர்.
அன்றைய தினம் இரவு 10 மணியளவில் திடீரென அவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது தாத்தா கிருஷ்ணன் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். அரிவாளால் வெட்டியதால் காயம் அடைந்தசின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சின்னத்துரையை அவருடன் பயிலும் சில மாணவர்கள் சாதி ரீதியாக தொல்லை பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சின்னத்துரையை பழிவாங்க மாணவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சின்னதுரையின் வீட்டுக்குள் நுழைந்த மாணவர்கள் அவரை அரிவாளால் உடலில் பல இடங்களில் வெட்டியுள்ளனர். தடுக்க சென்ற அவரது தங்கையையும் அந்த கும்பல் வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக 6 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர்களும் இயக்குனர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்... குறிப்பாக இயக்குனர் மாரி செல்வராஜும் பா.ரஞ்சித்தும் தங்களது கண்டனங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்
இந்த சூழலில் தான் இவ்விருவரையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர், அதில் அவர்கள் கூறி வருவதாவது ,, உங்க படங்களை எல்லாம் பார்க்கும் முன்பு வரை யாரும் பிரிதாக ஜாதியை பற்றி பேசியதே கிடையாது, நீங்கள் மத்த ஜாதிகாரனை தூண்டுவது போல படம் எடுப்பதால் எல்லாரும் வெளிப்படையா ஜாதி பெருமை பேச ஆரம்பிக்கின்றனர் , ஜாதியை மறந்து போன சமூகத்தை மீண்டும் ஜாதியை நோக்கி போக வைக்கிறீர்கள் .
இதற்க்கு காரணமே பா.ரஞ்சித்தும் ,மாரி செல்வராஜ் ம் தான். ஒற்றுமையாக இருந்த மக்களிடையே சாதி எனும் நஞ்சை பிஞ்சு பிள்ளைகள் வரை கலந்தது உங்கள் திரைப்படங்கள் மூலமாக தான், திருந்த வேண்டியது அவர்கள் அல்ல நீங்கள் உங்கள் சுய லாபத்திற்காக மக்களின் மனதில் நஞ்சை விதைத்துள்ளீர்கள்.
நீங்களே பட்டியலினம் பட்டியலினம் என மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லியும், சாதி பார்த்தே பதிவுகளை இடுவதிலுமே உங்கள் சாதி ஒழிப்பு நாடகம் நன்றாக தெரிகிறது. உண்மையில் தற்போது சாதி வெறியை வளர்ப்பவர்கள் உங்களைப் போன்ற திராவிட தலித்தியவாதிகளே ..,, மேலும் 60 ஆண்டு காலமாக நாங்கள் சாதியை ஒழித்து விட்டோம் சமூக நீதியை காப்பாற்றி விட்டொம் என்று கூவும் திராவிட கட்சிகளை நோக்கி ஏன் நீங்கள் இருவரும் கேள்வி எழுப்பவில்லை..? ஏன் தோழமை சுட்டும் திருமாவளவனை நோக்கி கேள்வி எழுப்பவில்லை ..? சாதியை மறந்து போன சமூகங்களிடம் ஆண்ட பரம்பரையை ஒழிப்போம் என்று என்று நீங்கள் தொடங்கியது இன்று பிஞ்சுகள் நெஞ்சில் நஞ்சாகிவிட்டது என்று சமூகவலைதளத்தில் கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர்.