24 special

தமிழ்நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் சகுனம் சரியில்லையே என உலா வரும் தகவல்கள்...!

Mkstalin,
Mkstalin,

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் பகுதியில் ஸ்ரீரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் 108 திவ்ய தேச கோயில்களில் ஒன்று...!திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்பி தரிசிக்கப்படும் கோயில் என்றால் அது திருச்சியில் உள்ள ஸ்ரீரங்க கோவிலின் அரங்கநாதரை தான். இது மட்டுமல்லாமல் ஸ்ரீரங்கத்தில் பிரம்மாண்டமாக பார்க்கப்படுவது அங்குள்ள 21 கோபுரங்களும் 58 சன்னதிகளும் ஏழு பிரகாரங்களும்...!


இத்தகைய சிறப்புமிக்க ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு நுழைவாயில் கோபுரத்தின் மேல்பகுதி சுவர் மற்றும் தூண்கள் வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அதற்கான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன மேலும் இந்த வழியாக பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில் திடீரென கிழக்கு கோபுரம் சுவர்கள் சடசடவென்று இடிந்து விழுந்தது கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பொதுவாக கோயில் கோபுரங்கள் நாட்டின் செல்வ வளத்தை குறிப்பதால் தற்போது ரங்கநாதர் கோவிலில் கோயில் கோபுரம் இடிந்து விழுந்தது அபசகுணம் என பக்தர்கள் பலரால் நம்பப்படுகிறது 

மேலும் கோபுரத்தின் சுவர்கள் பழுதடைந்த நிலையில் ஏன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் அரசு உள்ளது என்று பக்தர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோபுரத்தின் இடிந்து விழுந்த பகுதியை கண்காணித்தார் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது கோவில் கோபுரங்களை ஆய்வு செய்வதற்கு என்ஐ டிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம் என்றும்  மேலும் அவர்களின் ஆய்வு முடிந்தவுடன் இடிந்த கோபுரத்தை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார் இது மட்டுமல்லாமல் கோவிலில் மொத்தமாக உள்ள 21 கோபுரங்களிலும் என்ஐடி ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது இதே போல் தான் கடந்த 2015 ஆம் ஆண்டு கோயில் கோபுரங்கள் சரி செய்யும் பணிக்காக 34 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இருக்கும் கோபுரங்களின் நிலையை சரி செய்வதற்கு 94 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இவ்வாறு கோயில் கோபுரங்கள் இடிந்து விழுந்தாலோ அல்லது கொடி மரங்கள் சாய்ந்தாலோ வழக்கமாக கோயிலில் பரிகார பூஜைகள் செய்வது வழக்கம் ஆனால் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் கோயில் கோபுரம் விரிசல் ஏற்பட்ட நிலையிலும் பல அரசியல் சூழ்நிலைகளால் தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது என்பதை விடவும் தற்போது கோபுரம் இடிந்து விழுந்த பிறகும் கவனிப்பாரற்றுக்கிடப்பது ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என ஜோதிட ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். 

மேலும் கோயில் கோபுரங்கள்  இடிந்து விழுந்ததும் பரிகார பூஜைகள் எதுவும் செய்யாமல் இருப்பது ஆட்சிக்கு  மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டிற்கும் பேரழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது  எனவும் சிலர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இதுபோன்ற கோவில் விவகாரங்களை குறிப்பிட்டு முந்தைய ஆட்சியாளர்கள் சிலருக்கு நடந்த சம்பவத்தை கூட சில உதாரணமாக கூறுகின்றனர்.இந்த விவகாரத்தில் நம்பிக்கை உள்ள அரசியல் பார்வையாளர்கள்.

தஞ்சாவூர் பெரிய  கோவிலுக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் உள்ள நம்பிக்கை, இந்திரா காந்தி தமிழகம் வருகை, முன்னாள் முதல்வர் தஞ்சை பெரிய கோவிலில் பட்டு வேட்டி கட்டிக்கொண்டு ஆயிரமாவது ஆண்டு விழாவில் அமர்ந்தது என சில உதாரணங்களை கூறுகின்றனர். மேலும் ஸ்ரீரங்கம் கோவில் அசம்பாவிதம் தற்போதைய ஆளும் அரசுக்கு கூட சில நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் எனவும் கூறுகின்றனர்.