தற்பொழுது சென்னையில் மிக்ஜாம் புயலின் காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் கிட்டத்தட்ட நான்கு நாட்களை கடந்தும் வடியாமல் இருந்து வருகிறது சென்னை மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது, சென்னையின் புறநகர் நகர் பகுதிகள் மட்டுமல்லாமல் சென்னையின் சில பிரதான பகுதிகள் அதுவும் குறிப்பாக மக்கள் வசிக்கும் இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதும், மழைநீருடன் கழிவு நீர் தேங்கி இருப்பதும், விஷ ஜந்துக்கள் படையெடுப்புவதும் அதிகமாகி வருகிறது என்ன வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்படும் சென்னை வாசிகள் தற்பொழுது கோபம் அடைந்துள்ளனர்.
அந்த கோபம் எல்லாம் தற்பொழுது ஆளும் திமுக தரப்பு மீது சென்னை வாசிகளுக்கு திரும்பி உள்ளதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன, நேற்று அமைச்சர் சேகர்பாபு தொகுதியை பார்வையிட சென்று நிலையில் அமைச்சர் சேகர்பாபுவின் காரை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினார்கள், இது மட்டுமல்லாமல் அமைச்சர் கே என் நேருவும் முற்றுகையிடப்பட்டார்.
அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக பல இடங்களில் மின்சாரம் வேண்டும் மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர் மக்கள், இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனின் வீட்டை பொதுமக்கள் சூழ்ந்து போராடிய சம்பவம் தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெரம்பூர் தொகுதியில் திருவிக நகரில் சென்னை மேயர் ராஜனின் வீடு உள்ளது, திடீரென நேற்று மாலை அங்கு கூடிய பொதுமக்கள் பிரியா ராஜனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 'நீங்கதானே அம்மா என்கிட்ட வந்து ஓட்டு வாங்கிட்டு போனீங்க? உங்களுக்கு தான் நாங்க ஓட்டு போட்டோம்! மத்த ஏரியா எல்லாம் எப்படியோ கிடக்கட்டும் ஆனா நீங்க நம்ம ஏரியாவுல மழை தண்ணீர் எல்லாம் வெளியேற என்ன செஞ்சீங்கன்னு? என சொல்லி ஆரம்பத்தில் சாதாரணமாக கேள்விகள் கேட்க ஆரம்பிக்க பின்னர் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகியுள்ளது.
இதனால் என்ன செய்வது என்று பிரியா ராஜனுக்கு தெரியவில்லை அங்கு இருந்தவர்களிடம் 'எப்படியாவது நான் உங்களுக்கு சரி செய்து கொடுத்து விடுகிறேன், அதிகாரிகளை நான் பார்க்க சொல்கிறேன்' எனக் கூறினர்.
பிரியா ராஜன் கெஞ்சி கேட்டுக்கொள்ள அங்கிருந்தவர்கள் கோஷத்தில் இறங்கினர், வேறு வழி தெரியாமல் பிரியா ராஜன் நான் உங்க ஏரியா பொண்ணு! உங்க ஏரியாவில் வளர்ந்தவள் இதனால் எனக்கு இந்த ஏரியாவோட கஷ்டம் தெரியும் ப்ளீஸ் தயவுசெய்து கலைந்து போங்க நான் கண்டிப்பா பார்க்க சொல்றேன்' என கெஞ்சாத குறையாக இறங்கி கேட்க ஆரம்பித்து விட்டார்.
அதன் பிறகு அங்கிருந்து அவர்கள் சரி சீக்கிரம் செய்ய வேண்டும் இல்லையேல் மறுபடியும் போராட்டம் நடத்துவோம் எனக் கூறி கலைந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் ஆளும் திமுக தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது, ஏற்கனவே நான்காயிரம் கோடி ரூபாய் எங்கே என எதிர் கட்சிகளும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தற்போது திமுகவின் ஆட்சியாளர்களும், மேயரும் சுற்றி வளைக்கப்படும் சம்பவம் சென்னை தலைநகர் மட்டுமல்லாமல் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த விவகாரம் முடிந்தும் சென்னை மேயர் பிரியா ராஜன் அதிகாரிகளை அழைத்து என்ன நடப்பது என கண்காணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் திமுக தலைமைக்கு வேறு இந்த விஷயத்தை குறிப்பாக அமைச்சர் சேகர்பாபுரிடம் இந்த விஷயத்தை கூறியுள்ளார், எல்லா இடங்களிலும் அப்படித்தான் இருக்கிறது கொஞ்சம் சமாளியுங்கள் என திமுக தலைமையில் இருந்து பிரியா ராஜனுக்கு உத்தரவு பறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.