24 special

பெண் நெறியாளரிடம் சிக்கிய மெல்டிங் சரவணன் அடுத்த விவாதத்தில் குறிப்பிடுவதாக தப்பிப்பு..!

Melting saravanan
Melting saravanan

திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை பல்வேறு ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு திமுக சார்பில் தனது கருத்துக்களை தெரிவித்து வருபவர் தமிழக ஊடகங்களில் பல நேரங்களில் சரவணன் கருத்திற்கு தமிழகத்தில் உள்ள பிரபல நெறியாளர்கள் இடை மறித்து கேள்வி கேட்பது கிடையாது.


அதே ஞாபகத்தில் ஆங்கில ஊடகங்களில் கலந்து கொள்ள சென்ற சரவணன் தற்போது பெண் செய்தியாளரின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் ஏதேதோ பேசி எஸ்கேப்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நெறியாளர் : நீங்க வரிப்பணத்தில் மக்கள் நலத்திட்டங்கள் செய்கிறேன் என்று சொன்னால் மத்திய அரசு மட்டும் வரி பணத்தை கொண்டு போய் அவங்களுக்கு வீடா கட்கிட்டு இருகாங்க  என கேள்வியை சரவணனை நோக்கி வைத்தார்.

விவசாயிகளுக்கு வருடம் 6,000 ரூபாய்.ஒவ்வொரு இந்தியனுக்கும் வீடு கட்ட மானியம் இதெல்லாம் என்ன  சரவணன் மத்திய அரசு தானே கொடுக்கிறது எனவும் கேள்வியை முன் வைத்தார் நெறியாளர் 

இதற்கு பதில் கொடுத்த சரவணன் அதெல்லாம் தெரியாது சில கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லோன் வேவரிங் பண்றாங்க என குறிப்பிட்டார், அப்படியா?  கடந்த ஏழு வருடத்தில் அப்படி லோன் வேவரிங் செய்த ஒரு நபரின் பெயரை குறிப்பிடுங்கள் என சரவணனை நோக்கி சட்டென கேள்வி எழுப்பினார்.

அதுவந்து  ! அதுவந்து ! அடுத்த நிகழ்ச்சியில் குறிப்பிடுகிறேன் என குறிப்பிட்டு நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறாமல் கடந்து விட்டார் சரவணன், அதாவது தான் பேசும் கருத்திற்கு கூட எந்தவித தரவுகளையும் சேகரிக்காமல் வந்த வாக்கில் அடித்து விட்ட சரவணன் தற்போது மிக பெரிய அளவில் ட்ரோல் செய்யபட்டு வருகிறார்.