டெல்லியில் இருந்து வந்த ரிப்போர்ட், உளவுத்துறை அறிக்கை மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ரவியை சந்தித்தது போன்ற காரணங்களால் ஆடி போயிருக்கிறது ஆளும் கட்சியான திமுக.
தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு விவகாரங்களில் தமிழக காவல்துறை மற்றும் உளவுத்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளை பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக குற்றசாட்டு சுமத்தி வருகிறார் கள்ளக்குறிச்சி கலவரம் தொடங்கி கோவையில் கார் வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற மாநில உளவுத்துறையின் தோல்வியே காரணம் எனவும் அண்ணாமலை சுமத்தி வந்தார்.
இந்த சூழலில் அவையெல்லாம் தவறு கோவை சம்பவத்தை தமிழக காவல்துறை திறம்பட கையாண்டது என ஆளும் கட்சியினர் குறிப்பிட்டு வந்த நேரத்தில் முதல்வரும் கோவையை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க தமிழக காவல்துறை தலையில் இடியாய் விழும் அளவு மிக பெரிய அதிர்ச்சி ரிப்போர்ட்டை பிரதமருக்கான பாதுகாப்பு குழு அனுப்பி இருக்கிறது, பிரதமர் தமிழகம் வருகை தந்த போது மாநில அரசு சார்பில் வெடிகுண்டுகளை சோதனை செய்யும் மெட்டல் டிடக்டர் பல வேலை செய்யவில்லை எனவும் இது மிகவும் மோசமான பாதிப்புகளை உண்டாக்கும் வகையில் இருந்ததாக மாநில அரசிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டு இருக்கிறதாம்.
இது குறித்த முழுமையான தகவலை பட்டியலாக தயார் செய்து பாஜக மாநில நிர்வாகிகள் தமிழக ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு செயல்பாடு குறித்து விளக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார்களாம்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தமிழக காவல்துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார் உலகத்தில் அதிகமான பாதுகாப்பு அச்சுருத்தல் உள்ள பிரதமர் மோடிக்கு தமிழக அரசு கொடுக்க கூடிய பாதுகாப்பு இதுதானா என அடுக்கடுக்கான கேள்விகளை வைத்தார்.
ஏற்கனவே பல்வேறு பாதுகாப்பு சார்ந்த விமர்சனத்தை எதிர்கொண்டு வந்த காவல்துறை இப்போது பிரதமரின் பாதுகாப்பு சம்மந்தமான விவகாரத்தில் கோட்டைவிட்ட சம்பவம் முதல்வரின் தூக்கத்தை கெடுக்கும் சம்பவமாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமரின் பாதுகாப்பில் குளருப்படி நிகழ்ந்த காரணத்தால் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் அரசு ஆட்சியை தேர்தலில் இழந்தது உடன் டிஜிபி உள்ளிட்ட பலர் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகினர் அதே போன்ற பிரச்சனை தமிழகத்தில் ஆளும் திமுக அரசிற்கும் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.