
உலக அரசியலில் தன்னை வல்லரசு என்று கூறிக் கொண்ட அமெரிக்காவின் அரசியல் நிலை இன்று பரிதாபகரமான நிலையில் இருப்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமீபத்திய பேச்சே வெளிப்படையாக காட்டி விட்டது. விரைவில் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில், தனது சொந்த கட்சியினரிடையே “என்னை காப்பாற்றுங்கள்” என்று வெளிப்படையாக புலம்பிய டிரம்பின் பேச்சு, அமெரிக்க அரசியல் அமைப்பின் நிலையற்ற தன்மையை உலகுக்கு மீண்டும் நிரூபித்துள்ளது.
அமெரிக்க அரசியலில் வழக்கமாக, அதிபர் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் கட்டத்தில் இடைக்காலத் தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலில் கீழ்சபையான ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேட்டிவ்ஸ்-இன் 435 இடங்களுக்கும், மேல் சபையான செனட்-இன் 100 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. டிரம்ப் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், வருகிற நவம்பரில் நடைபெற உள்ள இந்த இடைக்காலத் தேர்தல், அவரது அரசியல் வாழ்வின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ட்ரம்ப் அரசு விதித்த கூடுதல் இறக்குமதி வரிகள், அமெரிக்க மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்ததால், பொதுமக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் சமீபத்தில் நடைபெற்ற பல மாகாண தேர்தல்களிலும் வெளிப்பட்டது. அந்தத் தேர்தல்களில் ட்ரம்பின் குடியரசு கட்சி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்தது.
குறிப்பாக, அமெரிக்காவின் பொருளாதார தலைநகராக கருதப்படும் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது, ட்ரம்புக்கு பெரும் அரசியல் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதேபோல், வெளிநாட்டு விவகாரங்களிலும் ட்ரம்ப் எடுத்த சில அதிரடி முடிவுகள் உள்நாட்டில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவில் அதிபர் மதுரோவை கைது செய்த நடவடிக்கை, நட்பு நாடான டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்தை கைப்பற்றுவேன் என அவர் விடுத்த மிரட்டல் போன்றவை, அமெரிக்க அரசியலில் பெரும் சர்ச்சையை உருவாக்கின.
மேலும், இந்தியா, மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி விவகாரத்தில், ட்ரம்பின் சொந்த கட்சியைச் சேர்ந்த எம்பிக்களே வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருவது, அவரின் அரசியல் நிலையை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.அதுமட்டுமில்லாமல் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா பார்லிமென்டில் தீர்மானமே கொண்டுவரப்பட்டது. எனவேஇந்தியாவை மையமாக வைத்து டிரம்ப்பின் பதவியை காலி செய்ய அங்குள்ள அரசியல் கட்சிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ட்ரம்ப் ஆட்சியின் முக்கிய அடையாளம் – அதிரடி அறிவிப்புகள். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஒரே நேரத்தில் கூடுதல் வரி, நட்பு நாடுகளையே மிரட்டும் வெளிநாட்டு கொள்கை ஆகும். இதற்கு நேர்மாறாக, மோடி–ஜெய்சங்கர் மாடல் என்பது அமைதியான ஆனால் கணக்கிட்ட திட்டமிடல். வரி, வர்த்தகம், பாதுகாப்பு, தூதரகம்—எந்த விஷயமாக இருந்தாலும், “அறிவிப்பு அரசியல்” அல்ல; “பேச்சுவார்த்தை அரசியல்”. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா என அனைத்து தரப்புகளுடனும் இந்தியா சமநிலை காக்கும் விதமாக நகர்த்தப்படுகிறது. உலகம் இரு துருவங்களாகப் பிளவுபடும் நிலையில் கூட, இந்தியா எந்தப் பக்கத்துக்கும் அடிமையல்ல என்ற தெளிவான செய்தியை மோடி அரசு வெளிப்படுத்தியுள்ளது.
இன்றைய உலக அரசியல் ட்ரம்ப் மாடலை நிராகரித்து, மோடி–ஜெய்சங்கர் மாடலை கவனிக்கத் தொடங்கியுள்ளது. அதிரடி அரசியல் உடனடி கவனம் பெறலாம். ஆனால், திட்டமிடப்பட்ட ராஜதந்திரமே நீண்டகால மரியாதையும், நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
