
அண்ணாமலை அடித்த அடியில் தற்போது எங்கு உள்ளார் என தேடப்படும் அளவில் தான் உள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிஅண்ணாமலையிடன் வாட்ச் பில்லை ஏன்டா கேட்டோம் என்ற நிலையில் உள்ளார் செந்தில்பாலாஜி. அதே போல் அண்ணாமலை குறித்து கேட்டாலும் பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆகிவிடுகிறார் செந்தில் பாலாஜி. இந்த நிலையில் மீண்டும் அமைச்சராக வேலைகளை ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பதவி இல்லாமல் செந்தில் பாலாஜியால் இருக்க முடியவில்லையாம். பண மோசடி வழக்கில், ‘அமைச்சர் பதவியா... ஜாமினா..?’ என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதால்தான், அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார் பாலாஜி. பதவியை ராஜினாமா செய்துவிட்டாலும், சென்னையிலுள்ள அரசு பங்களாவை இன்னும் காலி செய்யாமல்தான் இருக்கிறார்.
அத்துடன், அவரின் சொந்த மாவட்டமான கரூருக்கும், அவர் பொறுப்பாளராக இருந்த கோவைக்கும் இன்னும் பொறுப்பு அமைச்சர் நியமிக்கப்படாததால், அவரே அமைச்சராகத்தான் வலம்வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், இழந்த அமைச்சர் பதவியை மீண்டும் பெற, பல்வேறு சட்ட நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறார். அந்த வகையில், ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், தனக்கு எதிராகச் சில வரிகள் இருக்கின்றன. அதை நீக்க வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்திருக்கிறார் பாலாஜி. ‘அவருக்காகத்தான் அமைச்சரவையில் ஒரு இடத்தை காலியாகவே வைத்திருக்கிறது தலைமை. இந்த வழக்கில் பாலாஜிக்குச் சாதகமான தீர்ப்பு வந்தால், மறுகணமே அமைச்சர் பதவி அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது’ என்கிறது அறிவாலய வட்டாரம்.”
மீண்டும் செந்தில் பாலாஜி அரசியல் களத்தில் இறங்கினால் அண்ணாமலை அவர்களின் அடுத்த அதிரடி வேறுவிதமாக இருக்கும் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கிறது செந்தில் பாலாஜிக்கு எதிராக அண்ணாமலை தீவிரமாக களமாட போகிறார் என்ற தகவலும் வெளியாகி பரபரப்பை கூட்டியுள்ளது. கொங்கு மண்டல பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜியை மொத்தமாக வீழ்த்த அண்ணாமலை களமிறக்கப்படுவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.செந்தில் பாலாஜியை கொங்கு மண்டலத்திலிருந்து அண்ணாமலை விரட்டுவார் என கொங்கு மக்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் செந்தில் பாலாஜி மின்சார துறை அமைச்சராக இருந்த போது 2021 முதல் 2023 வரை, ‘டான்ஜெட்கோ’ மூலமாக 1,182.88 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 45,800 டிரான்ஸ்ஃபார்மர்கள், சந்தை மதிப்பைவிடக் கூடுதல் விலையில் கொள்முதல் செய்யப்பட்டதோடு, டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள் அனைத்தும் சொல்லிவைத்தாற்போல ஒரே விலைப்புள்ளிகளைக் கோரியிருந்தன.இந்த டிரான்ஸ்ஃபார்மர்கள் கொள்முதலில், 397 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது’ என்று அறப்போர் இயக்கம், லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகாரளித்திருந்தது. இரண்டு ஆண்டுகளாகியும், லஞ்ச ஒழிப்புத்துறை அதில் நடவடிக்கை எடுக்காததால், அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ நிர்வாக இயக்குநரான ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி இருவர்மீதும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கத்தால் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், ‘வழக்கு பதிவு செய்யப்படுவது குறித்து ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்கப் படும்’ என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறது. அரசு அளித்த உத்தரவாதத்தின்படி, வழக்கு பதிவு செய்யப்பட வில்லையென்றால், மனுதாரர் கோரியபடி, சிறப்புப் புலனாய்வுக்குழுவை நீதிமன்றமே நியமிக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை அரசே பாலாஜி, லக்கானி ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்தால், அமலாக்கத்துறை உள்ளே வருவதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே, பல வழக்குகளில் பிரச்னைகளை அனுபவித்து வரும் பாலாஜிக்கு, தற்போது டிரான்ஸ்ஃபார்மர் முறை கேடு வழக்கு மூலமாகப் புதுச்சிக்கல் முளைத்திருக்கிறது