
2026-ல் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஆளும் திமுக தோல்வி பயத்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே ரோட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார். மாநிலம் முழுவதும் ரோடு ஷோ நடத்துகிறார் வீடு வீடாக செல்கிறார். மேலும் கட்சியினருக்கு மாநிலம் முழுக்கப் தி.மு.க-வில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் விதமாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற அறிவிப்பை . இதையடுத்து, அமைச்சர்கள் முதல் உறுப்பினர்கள் வரை வீடு வீடாகச் சென்று ஸ்டிக்கர்களை ஓட்டி திமுகவில் ஆள் சேர்க்கும் சேர்க்கும் பணி தீவிரமாகியுள்ளது
சமூக வலைதளங்களில் போலியான வலைதள பக்கங்கள் மூலமாகவோ ஓ.டி.பி மூலமாகவோ அல்லது இணைய வழியில் வேறு வகையிலோ பணம் திருட்டு உள்ளிட்ட சைபர் கிரைம் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. மக்கள் தங்களது அடிப்படை ஆவண விவரங்களை, ஓ.டி.பி-யை யார் வந்து கேட்டாலும் கொடுக்கக் கூடாது’ என்று விழிப்பு உணர்வு கொடுக்க வேண்டிய பொறுப்பு, அரசுக்கு உள்ளது. ஆனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த தி.மு.க-வினரே அதை மீறுவதை என்னவென்று சொல்வது?
தற்போது தி.மு.க, `ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற பெயரில் இப்போது உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்திருப்பது, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் அளவுக்கு சலசலப்பை உருவாக்கியுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இதற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். `தி.மு.க நிர்வாகிகள் மக்களிடம் பல்வேறு ஆவணங்களைக் கேட்டுத் தொல்லை செய்கின்றனர். அனுமதி இல்லாமல், முதலமைச்சர் படத்துடன் கூடிய ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற சுவரொட்டியை வீடுகளில் ஒட்டுகின்றனர். மக்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, அலைபேசி எண் உள்ளிட்டவற்றை பெற்று தி.மு.க-வில் சேர்த்து வருகின்றனர். தர மறுத்தால், ‘இல்லத்தரசிகளுக்கான உரிமைத்தொகை உட்பட அரசின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும்’ என அச்சுறுத்துகின்றனர்.
அரசியல் பிரசாரத்துக்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களைப் பெறுவது, அரசியலமைப்பு வழங்கும் சுதந்திரம் மற்றும் தனி உரிமையை மீறுவதாகும். இப்படி சட்டவிரோதமாக ஆதார் விவரங்களைச் சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, தி.மு.க. பொதுச்செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வெவ்வேறு மாவட்டங் களில், வெவ்வேறு ஊர்களிலும் இப்படி ஏகப்பட்ட கதைகள் ஓடிக் கொண்டிருக்க. திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு முகவர்களாக இருப்பவர்கள் எல்லா வீடுகளுக்கும் போக முடியவில்லை. மக்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளார்கள். அதன் காரணமாக கட்சி சார்ந்த ஒருவரின் பொறுப்பில் உள்ளவர்களிடம் அந்தத் தெருவில் இருப்பவர்களில் 10 வாக்காளர்களைப் பிரித்துக் கொடுத்துளார்கள் . அவர் கொடுக்கும் மொபைல் எண்களை வைத்து அல்லது அந்த பொறுப்பாளரின் மொபைல் எண்ணையே கொடுத்து, எங்கள் ஆப்பில் பதிவு செய்வோம். அவர்களுக்காக வரும் ஓ.டி.பி-யையும் நாங்கள் நியமித்த நபரிடமிருந்து பெற்று, ஆப்பில் உள்ளீடு செய்கிறோம்’’என பொய்யாக உறுப்பினர்களை சேர்த்து வருகிறது திமுக.
இந்த நிலையில், தெருவில் நடமாடுபவர்களையெல்லாம் மடக்கிப் பிடித்து, என்ன ஏதென்றே சொல்லாமல் செல்போன் நம்பரை வாங்கி, ஓ.டி.பி அனுப்பி, கட்சியில் இணைத்துவருவது பிரச்னையைக் கிளப்பியிருப்பதும், உயர் நீதிமன்றம் வரை வழக்காகப் பதிவாகி யிருப்பதும் கட்சித் தலைமையை கோபத்துக் குள்ளாக்கியுள்ளது. `ஓடிபி விஷயத்தில் உஷாராக இருங்கள் மக்களே!' என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை தமிழ்நாடு காவல்துறையே ஒரு பக்கம் எச்சரிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம், தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க-வே வீடு வீடாகப் போய் ஓடிபி-யைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
நாளை மோசடி பேர்வழிகள், `லோன் கொடுக்க ஆள் சேர்க்கிறோம்’, ‘கோயில் திருவிழாவுக்கு ஆள் சேர்க்கிறோம்’ என்றெல்லாம் கிளம்பி வந்து மக்களிடம் ஆதார், ஓ.டி.பி விவரங்களைப் பெறும் ஆபத்தான போக்குக்கு இது வழி ஏற்படுத்திவிடக் கூடும். இந்த அடிப் படையில்தான் விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றுள்ளார், திருப்புவனம் ராஜ்குமார்.