
ஆப்ரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் துருக்கி இருந்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போரில்,பாகிஸ்தான் விமானப்படை இரண்டு நாட்களில் முக்கிய இந்திய விமான தளங்களைக் குறிவைத்து 500க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியது. இந்திய பாதுகாப்புப் படைகள் அவை அனைத்தையும் நடுவானிலேயே இந்தியா இடைமறித்துச் சுட்டு வீழ்த்தின.பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்கள் எல்லாம் துருக்கியின் தயாரிப்புகள் என்று தெரியவந்தது. இதனால் சன்னி இஸ்லாமிய நாடுகளான துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆழமான ராணுவ ஒத்துழைப்பு வெளிச்சத்துக்கு வந்தது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய துருக்கியை இந்திய மக்கள் புறக்கணித்துள்ளனர்.. இந்தியச் சுற்றுலாப் பயணிகள் துருக்கியைத் துரோக நாடு என்று கைகழுவியுள்ளனர். துருக்கியில் இருந்து மார்பிள் இறக்குமதியை நிறுத்துவதாக வணிகர்கள் அறிவித்துள்ளனர். திரைப்படத் துறையினரும் துருக்கியைப் புறக்கணித்துள்ளனர். துருக்கியுடனான வர்த்தகத்தை இந்திய வியாபாரிகள் முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர். துருக்கி கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களையும் இந்தியப் பல்கலைக்கழகங்கள் ரத்து செய்துள்ளன.
இந்த நிலையில் சமீப காலமாக துருக்கி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு ஒன்றன் பின் ஒன்றாக மூன்று கடிதங்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் கடிதங்களில் துருக்கி இந்தியாவிடம் உணவுத் தானிய உதவி கோரி இருக்கிறது. ஆனால் இந்திய அரசு இதுவரை அந்தக் கோரிக்கைகளுக்கு எந்தவிதமான பதிலும் அளிக்காமல் அமைதியாக உள்ளது.
துருக்கி தற்போது எதிர்கொண்டு வரும் நிலைமை உண்மையிலேயே மிகக் கடினமானது. அந்நாட்டில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் மக்கள் சாப்பிட தேவையான அடிப்படை உணவுகளுக்கே தவித்து வருகிறார்கள். துருக்கியின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளது.முழு முஸ்லிம் உலகத்தின் பாதுகாவலராக தன்னை காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி எர்டோகன், நடைமுறையில் தவறான வெளிநாட்டு கொள்கைகளால் துருக்கியை தனிமைப்படுத்தி விட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற வளமான நாடுகளுடன் ஏற்பட்ட தொடர்ச்சியான முரண்பாடுகள், துருக்கியின் பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தியுள்ளன.
சீனாவும் பாகிஸ்தானும் துருக்கியின் நண்பர்கள் போல பேசினாலும், அவர்களும் தங்களின் பொருளாதார சிக்கல்களில் சிக்கியுள்ள நாடுகளே. சீனா மற்றும் பாகிஸ்தானிலிருந்து கிடைத்த தானியங்களின் தரம் குறைவாக இருப்பதை துருக்கிய சுகாதாரத்துறை அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக, துருக்கிக்கு தற்போது உண்மையான நம்பிக்கையாக தெரியும் நாடு இந்தியாவாக மாறியுள்ளது.
“எங்களிடம் கோதுமை இருப்பு தீர்ந்து விட்டது. தயவுசெய்து ஆயிரக்கணக்கான டன் கோதுமை மற்றும் அரிசி வழங்குங்கள்” என்ற கோரிக்கையுடன் துருக்கி இந்தியாவை அணுகியுள்ளது. ஆனால் இங்குதான் முக்கியமான திருப்பம் ஏற்படுகிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து பேசிவந்த துருக்கிக்கு, இந்தியா தற்போது எந்தவிதமான அவசர உதவியும் வழங்கவில்லை.
இதற்குக் காரணம் தெளிவானது. இது பழைய இந்தியா அல்ல. இது புதிய இந்தியா. “எங்களை மதிப்பவர்களுக்கே நாங்கள் உதவுவோம்” என்ற உறுதியான கொள்கையுடன் இந்தியா செயல்படுகிறது. அதனால்தான் இஸ்ரேல், சவுதி அரேபியா, யுஏஇ, ஐரோப்பிய நாடுகள் போன்ற இந்தியாவுடன் நல்லுறவு கொண்ட நாடுகளுக்கு தாராளமாக கோதுமை அனுப்பிய இந்தியா, துருக்கிக்கு மட்டும் “நோ ஸ்டாக்” என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் துருக்கியின் எதிர்க்கட்சிகள் கூட எர்டோகன் அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளன. இதே பாதையில் அரசு தொடர்ந்தால், மக்கள் மிகப்பெரிய சிரமங்களை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிபுணர்கள் ஒரே விஷயத்தைத் தெளிவாகச் சொல்கிறார்கள் — இந்தியாவை மதிக்காத நாடுகள், இந்தியாவின் உதவியையும் எதிர்பார்க்க முடியாது.
