
உலகம் இன்று ஒரு பெரிய மாற்றத்தின் முன் நிற்கிறது… கடந்த நூற்றாண்டு “அமெரிக்க நூற்றாண்டு” என அழைக்கப்பட்டது. ஆனால் இந்த நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு” என்றழைக்கப்படுகிறது. அதில் இந்தியா மையப்புள்ளியாக இருக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையில், உலக அரங்கில் புதிய தலைமை பாதையை அமைத்துள்ளது.
கோவிட்-காலம் உலகம் முழுதும் அதிர்ந்தது. பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியது. பல நாடுகள் தடுமாறின… ஆனால் இந்தியா ‘உலகின் மருந்தகம்’ என்ற பெருமையுடன், 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 70 லட்சம் தடுப்பூசிகளை வழங்கியது. மனித நேயம், உலக ஒத்துழைப்பு, நெறிப்படுத்தும் சக்தி… இந்த உலகளாவிய செயல்பாடு இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தியது.பருவநிலை மாற்றம், சக்தி, சுற்றுச்சூழல்… உலகம் பல சவால்களை எதிர்கொள்கிறது. இந்தியா பிரான்சுடன் இணைந்து சர்வதேச சூரிய சக்தி கூட்டணியை தொடங்கியது. 92 நாடுகள் இதில் இணைந்தன. உலகம் பார்த்து வியந்தது – இந்தியா, மாற்றத்திற்கு முன்மாதிரியாக செயல்பட்டது.
2023-ல், ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற கருப்பொருளில், இந்தியா G20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையின் கீழ், அவற்றின் பொருளாதார மேம்பாட்டுக்கும் உள்கட்டமைப்புக்குமான நிதி உதவிகளையும் வழங்கியது. இது இந்தியாவை ஒரு உண்மையான உலகத் தலைவராக நிலைப்படுத்தியது.
QUAD கூட்டமைப்பில், எந்த நாட்டுக்கும் எதிரான இராணுவக் கூட்டணி இல்லை. கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி, தடுப்பூசி விநியோகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு – உலகளாவிய சவால்களை சமாளிப்பதில் இந்தியா முன்வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைந்தும், உளவுத்துறை பகிர்விலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் இந்தியா 49க்கும் மேற்பட்ட இடங்களில், 2,00,000க்கும் மேற்பட்ட துருப்புக்களை ஈடுபடுத்தி உலகளாவிய பாதுகாப்பில் முக்கிய பங்களிப்பை செய்கிறது.
இந்தியா பொருளாதார கொள்கையில் முழு சுதந்திரத்துடன் நிலைத்துள்ளது. அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியை பொருட்படுத்தமால் , ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து இந்தியா தன்னுடைய தேசிய நலனை முன்னிலைப்படுத்தி வருவதில் நிலையாக இருக்கிறது. வணிகத்தின் அடிப்படையில் நடக்கும் நடவடிக்கைகள், iCET ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவுடன் பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் வலுப்படுத்துகின்றன.
இப்போது இந்தியா யாரையும் பகைக்காமல், தன்னுடைய உறுதிப்பாட்டில் நிலையாக உலகிற்கு காட்டுகிறது. உலகின் பெரிய வல்லரசுகளும் இந்தியாவை தங்கள் கொள்கைக்கு ஏற்ற ஊசலாடும் நாடாக பார்க்க முடியாது. இந்தியா, “வசுதைவ குடும்பகம்” – உலகம் ஒரு குடும்பம் என்ற கொள்கையால் வழிநடத்தும் சக்தியாக, புதிய உலக ஒழுங்கின் முக்கிய தூணாக மாறிவிட்டது. இந்தியா தற்போது புதியபாதையை தேர்ந்தெடுள்ளது , இந்தியாவின் கண்ணோட்டத்தில் புதிய ரூல்ஸ் எழுதப்படுகிறது. யார் வல்லரசு என்பதற்கு முக்கியத்துவம் இல்லை…இதில் அந்தந்த நாட்டின் ஒற்றுமை, சக்தி மற்றும் உலக நலன் தான் முன்னிலை வகிக்கிறது. இந்த உலகில், பிரதமர் மோடி தலைமையில் புதிய வரலாறை எழுதியுள்ளது, நிரந்தர தலைமைக்கான சக்தியையும், தன்னிலைத் தாங்கும் உறுதியையும் காட்சிப்படுத்துகிறது. இது உலகின் சத்தமில்லா, ஆனால் சக்தி மிகுந்த மாற்றம். உலகம் புதிய விதிமுறைகளுக்கு தயாராகிறது… இந்தியா அவர்களுக்கான வழிகாட்டியாக காத்திருக்கிறது. இது தாண்ட மோடி எங்கள் பிரதமர் என நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார்கள் இந்தியர்கள் .
