
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மீண்டும் தமிழகம் வருகை தருகிறார். தமிழ்நாட்டுக்கு தொடர்ச்சியாக பயணங்களை மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.மாலத்தீவுகளுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து நேராக ஜூலை 26-ந் தேதி தூத்துக்குடி வருகை தந்தார். அங்கு ரூ4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பின்னர் ஜூலை 27-ந் தேதி அரியலூர் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார்.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 26-ந் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல செப்டம்பர் மாத இறுதியிலும் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வருகை தருகிறாராம். இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடி கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பயணம் மேற்கொள்கிறார்.சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து தமது வானொலி நிகழ்ச்சியான மனதின் குரலின் நேரலையில் மோடி பங்கேற்கிறார் என்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.
மோடியின் தமிழக பயணம் திமுக அரசுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் தமிழகம் வரும் மோடி கோவிலுக்கு செண்டு அந்த கோவிலை உலக அளவில் பேசப்படவைக்கிறார். இதனால் அந்த மாவட்டடங்களில் சுற்றுலா துறை மேம்படும். ஒரு பிரதமர் சென்று வந்த இடம் என்றால் உலக முழுவதும் அந்த இடம் பேசு பொருளாகும். சீனா பிரதமரை மகாபலிபுரத்தில் சந்தித்து மிக பெரும் சுற்றுலா தலமாக மாற்றினார் மோடி. உலக அளவில் உள்ள சுற்றலா பயணிகள் அனைவரும் வந்து செல்கிறார்கள்.
அதுபோல் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம், மற்றும் இராமேஷ்வரம் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சோழ மன்னரின் கங்கை கொண்ட சோழபுரம் என பிரதமரின் வருகையால் மீண்டும் பொலிவுற்று அந்த அந்த பகுதிகள் பொருளாதர ரீதியிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழனின் பெருமையும் உலகம் முழுவதும் பரவ செய்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி திருவண்ணாமலை கோவிலுக்கு வருகை தருவது மஅந்த பகுதி மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அவரின் வருகையால் திருவண்ணாமலை புகழ் உலகம் முழுவதும் பரவும் ஏற்கனவே வெளிநாட்டினர் அதிகம் பேர் திருவண்ணாமலை நோக்கி வருகிறார்கள் பிரதமர் மோடி வந்து சென்றால் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகளையாவது இந்த திமுக அரசு நிறைவேற்றும் என கருத்து கூறி வருகிறார்கள்.
சனாதனம் குறித்து விமர்சித்த திமுகவினருக்கு பிரதமர் மோடியின் கோவில் பயணங்கள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, தமிழக கோவில்கள் கடவுள்கள் பெருமையை உலகம் முழுவதும் சேர்க்கும் தூதுவனாக மாறியுள்ளார் பிரதமர் மோடி என பாஜகவினர் கருத்து கூறிவருகிறார்கள். மேலும் சிவபக்தர்கள் சிவனடியார்கள் பிரதமர் மோடியின் ரசிகர்களாகவே மாற ஆரம்பித்து விட்டார்கள் என சொல்லலாம். ஒட்டு மொத்தமாக இந்து மக்களின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.
மேலும் திமுக பாஜகவை நிதி தருவதில்லை எனகூறினாலும் அதற்கும் பதிலடி நேரடியாக பதிலடி தந்து வருகிறார் பிரதமர் மோடி அவர்கள். காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் தமிழகம் அதிக பயன் பெற்றதா இல்லை நரேந்திர மோடியின் ஆட்சியில் தமிழகம் அதிகம் பயன் பெற்றதா என பட்டியலிட்டு திமுகவை கிழித்து தொங்கவிட்டு வருகிறார்.