இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான வேலைகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தெலுங்கானா மாநிலத்திற்கு வருகை புரிந்ததோடு மகபூப்நகர் மாவட்டத்தில் ரூபாய் 13 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் அந்த விழாவில் தெலுங்கானாவில் மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்ற உறுதியையும் அளித்து 12 வருடங்களாக மஞ்சள் விவசாயி ஒருவர் மேற்கொண்டு வந்த அமைதிப் போராட்டத்திற்கு முடிவு கட்டினார். அதாவது தெலுங்கானாவில் நிஜாமாபாத் மாவட்டம் பாலோம் கிராமத்தைச் சேர்ந்த 71 வயதை அடைந்த மஞ்சள் விவசாயி ஒருவரான மனோகர் ரெட்டி தன்னைப் போன்ற மஞ்சள் விவசாயிகள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக தன் மாவட்டத்தில் மஞ்சள் விவசாய வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பியதோடு மஞ்சள் வாரியம் தனது மாவட்டத்தில் நடைமுறைக்கு வரும் வரை காலணி அணிய மாட்டேன் என்ற சபதமும் எடுத்துள்ளார்.
இவர் இந்த சபதம் எடுத்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகிவிட்டதாம் அதாவது 2011 ஆம் ஆண்டில் எனது மாவட்டத்தில் மஞ்சள் வாரியம் நடைமுறைக்கு வரும் வரை காலணி அணிய மாட்டேன் என்ற சபதத்தை மஞ்சள் விவசாயி மனோகர் ரெட்டி எடுத்துள்ளார். மேலும் 2011 ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் தேதி அன்று அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள இச்சோடாவிலிருந்து திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் வரை கிட்டத்தட்ட 63 நாட்கள் பாதயாத்திரை சென்றுள்ளார். இப்படி மஞ்சள் விவசாயி சபதம் எடுத்து 12 வருடங்கள் ஆகிய நிலையில் தெலுங்கானா மகபூப்நகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவில் மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்ற உத்தரவையும் அளித்துள்ளது விவசாயி மனோகர் ரெட்டிக்கு மகிழ்ச்சி அளிக்கிறது மட்டுமின்றி அவரது சபதத்திற்கும் நல்ல முடிவு கிடைத்தது. பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டதால் அவருக்கு நன்றி தெரிவித்த மஞ்சள் விவசாயி மனோகர் ரெட்டி 12 ஆண்டு கால சபதத்தை முடித்துக் கொண்டு காலணி அணிந்து கொண்டார். அதுமட்டுமின்றி மஞ்சள் உற்பத்தியில் இந்தியாவே உலக அளவில் முதலிடத்தில் இருப்பதாகவும் அதிலும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து மூன்று லட்சம் டன் ஒவ்வொரு ஆண்டிற்கும் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது இதனால் தேசிய அளவில் தெலுங்கானா முதல் இடத்தை பெற்றுள்ளது.
இந்தியாவின் மொத்த மஞ்சள் உற்பத்தியில் 3,00,000 டன் பங்கை கிட்டத்தட்ட 28% மஞ்சள் உற்பத்தியை தெலுங்கானா மாநிலம் தருகிறது என்றால் எவ்வளவு விவசாயிகளை இருப்பார்கள் அவர்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்மை அதன் மூலம் கிடைக்கும் இதனால் அனைத்தும் மஞ்சள் விவசாயிகளும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் தெலுங்கானா மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள மஞ்சள் வாரியத்தால் அம்மாநில விவசாயிகள் பயனடைவது மட்டுமின்றி தமிழகமும் அதிலும் குறிப்பாக கொங்கு மண்டலமான ஈரோடு பகுதிகளில் அதிக மஞ்சள் விவசாயிகள் இருப்பதால் அவர்களுக்கும் இது பெரும் பலனை கொடுக்கும் என்பதால் ஈரோடு பகுதியில் உள்ள பெரும்பாலான மஞ்சள் விவசாயிகள் பாஜகவினருக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்து விட்டனர். இந்த செய்தி திமுக தரப்பிற்கு பேரிடியாக அமைந்துவிட்டது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் நமக்கு ஒரு தொகுதி கூட வராது, இந்த நிலையில் பிரதமர் இந்த திட்டத்தை வேற அறிவித்து டெபாசிட் கூட பெற முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டார் என அறிவாலய வட்டாரம் புலம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.