24 special

அரசு பள்ளியில் மாணவிகளுக்கு நேர்ந்த துயரம்!.... முதல் ஆளாக குரல் எழுப்பிய பாஜக தலைவர்!

narayana thirupathi
narayana thirupathi

சேலம் மாநகர் கோட்டை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 300கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் முறையான குடிநீர் வசதி இல்லை என மாணவிகள் கோரியதால் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளுக்கு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள குடி நீர் தொட்டியில் சுகாதாரமற்ற நிலையில் புழுக்கள்,பூச்சிகள் இருந்துள்ளன. அதனை சுத்தப்படுத்தி தர சொல்லி மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர். அதற்கு தலைமை ஆசிரியர் சுத்தம் செய்வதைக்கான வேலையை பார்க்காமல் புகார் அளித்த மாணவிகளை தரையில் முட்டி போட வைத்துள்ளனர். மேலும் இது குறித்து சமூக தளத்திலோ அல்லது யாரிடமாவது கூறினால் உங்களுக்கு டிசி கொடுத்துவிடுவேன் என்று பள்ளி தலைமை ஆசிரியர் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டதால். அங்கு பரபரப்பு நிலவியது. தகவலரிடந்த்து வந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து அந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் கூறியது: "கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தண்ணீர்த் தொட்டி சுத்தம் செய்யப்படாமல், மாசடைந்து உள்ளது.


இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தும் ஆனால் ஆசிரியர்கள் எண்களின் மதிப்பெண்ணை குறைத்து போடுவதாக கூறி மிரட்டுகின்றனர். மேலும், இந்த தண்ணீரை குடிக்கும் மாணவிகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது’’ என்று புகார் தெரிவித்தனர். எனவே சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை மற்றும் பள்ளி நிர்வாகம் உடனடியாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதோடு இனிவரும் காலங்களில் இது போன்ற நடக்காமல் இருக்க முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கழிவறைகளையும் முறையாக சுத்தம் செய்து சுகாதாரமாக பயன்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஏற்கனவே இந்த பள்ளியில் அரசு பொதுத் தேர்வின்போது கேள்வித் தாள் தைக்கும் பணியில் மாணவிகளை ஈடுபடுத்தியதற்காக தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, மீண்டும் பணியில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து  பள்ளி ஆசிரியர்கள் யார் மீதும் சேலம் மாவட்ட பள்ளி கல்வித்துறை எந்த நடவாகியும் எடுக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. பெற்றோர்கள் மத்தியில் இந்நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் சமூக தளத்தில் வைரலானதையடுத்து, பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் நாராயண திருப்பதி தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சேலம், கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்குடிக்கும் குடிநீர் தொட்டியில் புழுக்கள் உள்ளதாக கூறி மாணவிகள்  போராட்டத்தில்ஈடுபட்டுள்ளது தமிழக  கல்விதுறையின் நிர்வாகத்தை சீர்கேட்டை வெளிப்படுத்துகிறது.  மேலும்,  இது குறித்து புகார் அளித்தால், மதிப்பெண்ணை குறைத்து விடுவோம் என ஆசிரியர்கள் மிரட்டுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு கல்வித்துறையில் நிலவும் அதிகார, அராஜக போக்கை உணர்த்துகிறது. த‌மிழக‌ கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு இந்த விவகாரத்தில் தொடர்புடைய  ஆசிரியர்கள் ம‌ற்று‌ம் பள்ளி நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியறுத்திள்ளார்". தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இது போன்று பல பள்ளிகளில் சுகாதாரமற்ற நிலையில் கழிவறை, நீர் தேக தொட்டி உள்ளது உடனடியாக அனைத்து பிள்ளையின் தரத்தை உறுதி படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்தை முன் வைத்து வருகின்றனர்.