நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பலரும் அறியாத சம்பவத்தை சொல்லி இருப்பது தற்போது தமிழகம் கர்நாடகாவை தாண்டி இந்தியா முழுவதும் கடும் வைரலாக பரவ தொடங்கி இருக்கிறது.சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜ் நடிகரான இவர் முன்பு போல் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அரசியல்வாதியாக உருவெடுத்து இருக்கிறார், அவ்வப்போது அரசியல் கருத்துக்கள் தெரிவிக்கும் பிரகாஷ்ராஜ்.தனியார் ஊடகம் ஒன்றில் அண்ணாமலை குறித்து பேசி இருந்தார் அதில், இந்த அண்ணாமலை மோசம் நானும் ஜீக்னேத் மெவாணியும் சிக் மங்களூரரில் போராட்டம் நடத்த அனுமதி கேட்ட போது மறுத்து விட்டார் அட அதோடு நில்லாமல் நடு வீதியில் நின்று போரட சென்றோம் அப்போதும் எங்களை நிப்பாட்டி FIR போட வச்சார், நா ரெண்டு வருஷம் கோர்ட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் அலஞ்சேன் தெரியுமா? என கதறு கதறு என கதறி இருக்கிறார்.
இந்த சூழலில் தான் பிரகாஷ்ராஜ் கருத்திற்கு தமிழக மக்கள் தற்போது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர், தமிழகம் கர்நாடக இடையே காவேரி பிரச்சனை கொழுந்து விட்டு எரிகிறது,பிரகாஷ்ராஜை வாழ வைத்த தமிழர்கள் விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் வேதனை அடைந்து இருக்கிறார்கள் ஆனால் இந்த பிரகாஷ்ராஜ் அது பற்றி ஒரு ஆதரவான கருத்தை தெரிவிக்கவில்லை.மாறாக அண்ணாமலையை விமர்சனம் செய்வதில் மட்டும் குறியாக இருக்கிறார்,தமிழரான அண்ணாமலை காவேரி விஷயத்தில் கர்நாடக அரசை எதிர்த்து அறிக்கை கொடுத்து இருப்பதுடன் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்,கன்னடரான பிரகாஷ்ராஜ் அண்ணாமலை அப்போது போலீசாக இருந்த போது சட்டத்தை மீறிய பிரகாஷ்ராஜை ஓட விரட்டியது குறித்து புலம்பி கொண்டு இருக்கிறார் என பொதுமக்கள் விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.அண்ணாமலை திமுகவை தான் துவைத்து எடுக்கிறார் என்றால் போலீஸ் அதிகாரியாக இருக்கும் போது நடிகர் பிரகாஷ் ராஜை விரட்டி அடித்த சம்பவமும் நடந்து இருக்கிறதா உண்மையில் கர்நாடக சிங்கமாகதான் அண்ணாமலை வலம் வந்து இருக்கிறார் என பல்வேறு தரப்பும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.