
இந்தியா இதுவரை பெரும் வர்த்தகக் கப்பல்களை கட்டும் திறனை வெளிப்படுத்த முடியாமல் இருந்த நிலையில், இப்போது அதனை மாற்றும் வகையில் மாபெரும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், ஆயில் டாங்கர்கள் முதல் மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் வரை நாட்டிலேயே கட்டப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் வகையில் 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஜெர்மனியுடன் கைகோர்த்துளளது மத்திய அரசு.... புரோஜக்ட் 75 திட்டத்தின் கீழ் கடற்படையை நவீனமாக்க புதிய பாய்ச்சலுடன் இந்தியா தயாராகி வருகிறது.
இந்த நிலையில் வர்த்தக கப்பல்களை கட்டும் திட்டத்திற்காக 70000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளதுடன், உள்கட்டமைப்பு வசதிகள், துறைமுகங்கள், கப்பல் தொழிற்சாலைகள் அனைத்தும் விரிவுபடுத்தப்படவிருக்கின்றன.
இதனால், அடுத்த 10 ஆண்டுகளில் உலகக் கடலில் ஓடும் கப்பல்களில் குறைந்தது 20% இந்தியாவில் கட்டப்பட்டவை என்றும், அடுத்த 30 ஆண்டுகளில் அது 50% ஆகும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே பாரதியாரும், வ.உ.சிதம்பரனாரும் இந்தியா தன்னுடைய கப்பல்களை உலகம் முழுவதும் இயக்க வேண்டும் என்று கனவு கண்டிருந்தனர். அந்த கனவு நடைமுறைக்கு வரும் தருணமாக இது பார்க்கப்படுகிறது. “அந்த மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்” என்ற பாரதியாரின் வரிகள் இப்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அரசு நிறைவேற்றுகிறது
மத்திய அரசின் இந்த முயற்சி தேசத்தின் பெரிய கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறது. அதற்காக , நிதி ஒதுக்கீடு, தொழில்நுட்ப மேம்பாடு, சர்வதேச போட்டியை எதிர்கொள்ளும் திறன் என பல வகைகளில் இந்தியா தனி மேம்படுத்தி வருகிறது
மத்திய அரசு “மக்களின் வரிப்பணம் நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது; முந்தைய காலத்தில் நடந்த ஊழல்களைப் போல அல்ல” என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்
தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் வெற்றி பெற்றுள்ள இந்தியா, தற்போது கப்பல் கட்டும் துறையிலும் முன்னணி இடத்தை பிடிக்கத் திட்டமிட்டுள்ளது. வேலைவாய்ப்புகள், தொழில்நுட்ப மேம்பாடு, வர்த்தக நம்பிக்கை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வர்த்தக கப்பல்கள் திட்டம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது
மேலும்.அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் ஆறு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புரொஜக்ட் 75 இந்தியா திட்டம் தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
ஜெர்மனியுடன் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் "புராஜெக்ட் 75 இந்தியா" நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து, Mazagaon Dockyards limited, ThyssenKrupp Marine Systems ஆகியவற்றுடன் பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
மேலும் புரொஜக்ட் 75 இந்தியா திட்டத்தைத் தவிர்த்து, மேலும் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்கும் முயற்சியிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடந்தால், ஆறு மாதங்களுக்குள் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும், இது இந்தியாவின் மிக முக்கியமான பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்று எனவும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.