24 special

பாகிஸ்தானுக்கு பாய்ந்த சிந்து நீர், இனி இந்திய விவசாயிகளுக்கு, மாபெரும் அதிரடி திட்டம்...! பாக்கின் மொத்த கதையும் முடிந்தது

PMMODI,SHEHBAZSHARIF
PMMODI,SHEHBAZSHARIF

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் பாகிஸ்தானில் இருந்த இந்திய தூதரக ஊழியர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், இங்கிருந்த தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றப்பட்டனர்.போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை .என மத்திய அரசு அறிவித்தது.


வடஇந்திய மாநிலங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறை நீண்டகாலமாக உள்ளது. இதற்கு தீர்வாக, சிந்து நதியின் நீரை மடைமாற்றி கொண்டு வர மத்திய அரசு மிகப் பெரிய திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த திட்டம் வெற்றி பெற்றால், ஒரு பக்கம் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் தடையில்லாமல் செல்லாமல் தடுக்கலாம்; மறுபக்கம் வறண்டு கிடக்கும் நிலங்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கச் செய்யலாம்.

கடந்த ஏப்ரல் மாதம், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததை அடுத்து, இந்தியா–பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.அப்போது பிரதமர் மோடி, “தண்ணீரும் ரத்தமும் சேர்ந்து ஓட முடியாது” என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

பாகிஸ்தான் இந்த முடிவை எதிர்த்து உலக வங்கியிடம் புகார் அளித்தது. ஆனால், இது இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என்பதால் தலையிட முடியாது என்று உலக வங்கி மறுத்துவிட்டது. அதனால், சிந்து நதியின் நீர் மீண்டும் பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் அரசு உறுதி பெற்றது.

இந்த நிலையில்தான், டில்லியில் மத்திய அரசு உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியது.

அதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், டில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அந்த கூட்டத்தில், பியாஸ் நதியுடன் சிந்து நதியை இணைக்கும் வகையில் 14 கிலோமீட்டர் நீள கால்வாய் அமைப்பதற்கான திட்டம் தயாராகிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. இந்தப் பணிகளை எல் அண்டு டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஓராண்டுக்குள் முழுமையான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இமயமலைப் பகுதியில் பாறைகளை குடைந்து கால்வாய் அமைப்பது பெரிய சவால். பலவீனமான பாறைகள் எதிர்படுமானால், குழாய் அமைத்து அதில் நீரை ஓடச் செய்ய வேண்டியிருக்கும். அதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதபடி பணிகளை நடத்த வேண்டியது மிக முக்கியம்.

ராஜஸ்தான்,ஜம்மு-காஷ்மீர்,ஹரியானா,பஞ்சாப்,டில்லிஆகிய மாநிலங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகள் பூர்த்தியாகும்.அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்தப் பணிகளை முடிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பே இந்தத் திட்டத்தை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. இதனால், சிந்து நதிநீர் விவகாரம், அரசியல் ரீதியாகவும் பெரிய முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.