
வக்பு வாரியம் என்பது ஒரு இஸ்லாமிய அறக்கட்டளை வாரியம் ஆகும். மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக சொத்து நன்கொடையாக வழங்கப்படும். ஒரு சொத்து வக்ஃப் வாரியத்திற்கு கீழ் என்று உரிமை கோரப்பட்டால்.. அந்த சொத்தை விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது. அந்த சொத்து அதன்பின் வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டிலேயே நிரந்தரமாக இருக்கும்.
இதற்கிடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் திருச்சி மாவட்டத்தில் 8 வருவாய் கிராமங்களில் உள்ள நிலங்கள் முழுமையாக வக்பு வாரியமத்திற்கு சொந்தம் என கூறியதுதான். இந்த தகவல் அந்த கிராமத்தினர் மற்றும் நில உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அதுமட்டுமில்லாமல் அங்குள்ள “திருச்செந்துறை சந்திரசேகரர் சுவாமிகள் கோயில் ஏறத்தாழ 1,500 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் இடமும் வக்பு வாரியத்துக்கு சொந்தம் தான் என வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.அப்துல்ரகுமானின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் எப்படி நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட வக்பு வாரியம் 1500 ஆண்டுகள் பழைமையான கோவிலை சொந்தம் கொண்டாட முடியும் என கேள்விகள் எழுந்தது.
பல சந்தர்ப்பங்களில், மக்கள் தங்கள் தனிப்பட்ட சொத்துக்கள் தங்களுக்குத் தெரியாமலோ அல்லது ஒப்புதல் இல்லாமலோ வக்ஃப் ஆக பதிவு செய்யப்பட்டதைக் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தார்கள். இதன் காரணமாக மக்கள் பலர் தங்களின் நிலங்களை மீட்க வேண்டி சட்ட போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. பலர் இப்படி தங்களின் நிலங்களை மீட்க.. பல வருடங்களாக சட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் நிலங்களை வக்ஃப் வாரியம் முறைகேடாக கைப்பற்றியதாக புகார்கள்வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் தான் வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக, வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு புதிய சட்டத்திருத்த மசோதா கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. மேலும் வக்ஃப் வாரியத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், பொது நலனைப் பாதுகாப்பதற்கும் ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இந்த சட்டம் பார்க்கப்படுகிறது. சீர்திருத்தத்தின் தேவை மறுக்க முடியாதது. மேலும் மசோதாவிற்கு ஆதரவாக கோடிகணக்கில் ஆதரவு மின்னஞ்சல்கள் நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பப்பட்டது. மேலும் 97.27 லட்சத்திற்கும் அதிகமான மனுக்கள், குறிப்பாணைகள் ஜேபிசிக்கு நேரடி மற்றும் ஆன்லைன் மூலமாக வந்தது. ஜேபிசி அதன் அறிக்கையை இறுதி செய்வதற்கு முன்பு அவை ஒவ்வொன்றையும் ஆய்வு செய்தது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 284 வக்ஃப் வாரிய பிரதிநிதிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மக்களவையில் இந்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தாக்கல் செய்து அதிகப்படியான உறுப்பினர்களுடன் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆலோசனை செயல்முறையாகநாடாளுமன்ற கூட்டுக்குழு யின் செயல்பாடு அமைந்தது.
1970-ஆம் ஆண்டு முதல் டெல்லியில் நடந்து வரும் ஒரு வழக்கில், டெல்லி வக்ஃப் வாரியம் நாடாளுமன்ற கட்டிடம், ஏர்போர்ட் உட்பட பல சொத்துக்கள் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று உரிமை கோரியது. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. ஆனால் அந்த நேரத்தில், யுபிஏ அரசாங்கம் 123 சொத்துக்களை வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைத்தது.இன்று இந்தத் திருத்தத்தை நாம் அறிமுகப்படுத்தவில்லை என்றால், நாம் அமர்ந்திருக்கும் நாடாளுமன்றக் கட்டிடம் கூட வக்ஃப் சொத்தாக மாற்றப்பட்டிருக்கும். நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வராவிட்டால், பல சொத்துக்கள் வக்ஃப் வாரியத்திற்கு மாற்றப்பட்டிருக்கும்.வக்ஃப் சொத்துக்கள் என்பது தனியார் சொத்துக்கள். அவற்றை ரயில்வே மற்றும் ஆயுதப்படைகளின் நிலங்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது” என கிரண் ரிஜூஜூ பேசினார். அதுமட்டுமில்லாமல் ஒரேநாடு ஒரே தேர்தல் சட்டமும் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது மோடி அரசு.