
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு, அ.தி.மு.க-விற்குள் மட்டுமல்ல, அக்கட்சியோடு தொடர்புடைய பலருக்குள்ளும் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தைப் பாய்ச்சியிருக்கிறது. இனி நமது நிலை என்னாகும்... அதிமுக இணைப்பை டெல்லி சாத்தியப்படுத்துமா... பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி இறுதியாகிவிட்டதா...' எனப் பல கேள்விகள், அ.தி.மு.க-வோடு தொடர்பிலிருந்த தலைவர்களிடம் வட்டமடிக்கின்றன. , சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், அடுத்த மூவ் என்ன என எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் எனப் பலருமே குழம்பித்தான் போயிருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு சசிகலாவிடம் செல்ல இருந்த கட்சியை தர்ம யுத்தம் நடத்தி மீட்டது ஓ.பன்னீர் செல்வம் தான். தர்ம யுத்தம் நடந்த போது சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி அதன் பின் சசிகலாவை தூக்கிவிட்டு பன்னீர் செல்வதுடன் இணைந்து அதிமுகவை கைப்பற்றினார் அதன் பின்னர் ஓ.பன்னீர் செல்வத்தை கழட்டிவிட்டார் எடப்பாடி. அதற்கடுத்து எடப்பாடி சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வியை தழுவினார்.
குறிப்பாக தனது தோல்வியை மறைப்பதற்கு பாஜகவின் மேல் பழியை சுமத்தி பாஜக கூட்டணியில் இருந்து விலகினார்.எடப்பாடி அதன் பின் அவர் சந்தித்த தேர்தல்களிலும் தோல்வியே தழுவினார். பாஜக மாபெரும் வளர்ச்சியை கண்டது இதனை தொடர்ந்து அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர் இப்படியே போனால் அதிமுக அழிந்து விடும் என்பதால் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள் ஆனால் எடப்பாடி பழனிச்சாமிஅதை காது கொடுத்துக் கூட கேட்பதாக தெரியவில்லை மேலும் எடப்பாடிக்குக்கு எதிராக செங்கோட்டையன் போர் கொடி தூக்கி வரும் நிலையில் எடப்பாடிக்கு தலையில் பேரிடியை இறக்கி உள்ளார் சைதை துரைசாமி.அவர் நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியுள்ளதாவது ;
தி.மு.க.,வை வீழ்த்த வேண்டுமென்றால், அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும்; பா.ஜ.,வுடன் கூட்டணியும் அவசியம் தேவை' என்று சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி வலியுறுத்தி உள்ளார்.அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகள் சொல்ல விரும்புகிறேன்.
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வினரை ஒற்றுமைப்படுத்த வேண்டும். பா.ஜ., மற்றும் தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான கூட்டணி அமைத்து தி.மு.க.,வை வீழ்த்துவது மிகவும் அவசியம்.அராஜகம், அரசியல் கொள்ளை, ஊழல் போன்றவைகளிலிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும்.கட்சியின் தொண்டர்களை 1972ல் உற்சாகமாகப் பணியாற்றிய, அந்த பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
தொண்டர்களையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல எம்.ஜி.ஆர்., மேற்கொண்ட சில அரசியல் முடிவுகளை நினைவூட்ட விரும்புகிறேன்.மத்திய அரசுடன் நட்போடு பழகி தேர்தலில் கூட்டணி அமைத்தே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.* இந்திரா மீண்டும் பிரதமரானபோது, தமிழகத்தில் எம்.ஜி.ஆரின்ஆட்சி கலைக்கப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் சென்று, 'என்ன தவறு செய்தேன் என் ஆட்சியை கலைத்தார்கள்? தீர்ப்பளியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். மீண்டும் எம்.ஜி.ஆர் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார்.
அதனை தொடர்ந்து காங்கிரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தி.மு.க வை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.திருப்பத்துார் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி வேட்பாளரான அருணகிரிக்கு தானே வலியச் சென்று ஆதரவு கொடுத்தார்.தி.மு.க., கூட்டணியை பிரிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு பிரசாரம் செய்து வெற்றிபெற வைத்தார். அது அன்றைக்கு மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி மத்திய அரசுடன் நல்ல நட்பு உருவானது.
இப்படி அரசியல் முடிவுகள் எடுக்கின்ற போது கட்சி நலன், மக்கள் நலன், தொண்டர்கள் நலன் என்ற வகையில் எம்.ஜி.ஆரின் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.மத்திய அரசோடு எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிக்கமாட்டார். இந்த அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தால் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லலாம்.கூடிவாழ்ந்தால் கோடி நன்மை... குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை... மறப்போம், மன்னிப்போம்... எனவே ஒற்றுமையுடன் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல மத்திய பா.ஜ., வோடு இணைந்து பலமான கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகளை ஒற்றுமைப்படுத்த வேண்டும்.
பா.ஜ.க மற்றும் தோழமைக் கட்சிகளை இணைத்து 2026ல் பலமான வெற்றி கூட்டணி அமைத்து கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும்.இவ்வாறு சைதை துரைசாமி அறிக்கையில் கூறியுள்ளார்