
கச்சத்தீவு மீட்பு என்பது தமிழக அரசியல் களத்தில் புதிய முழக்கம் அல்ல. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுகவும் அதிமுகவும் கச்சத்தீவை மீட்போம் என பல தேர்தல்களில் வாக்குறுதி வழங்கியுள்ளன.நாடாளுமன்றத்திலும் 1960களிலும் சரி, தற்போதும் சரி, இந்த விவகாரம் பேசப்பட்டு வருகிறது. நூறு ஆண்டுகளாக நிலவி வரும் இந்த விவகாரம் 2026 தேர்தல் வர இருப்பதால் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் களத்தில் பேசப்படும் அளவு பெரிதாக இருக்கும் கச்சத்தீவு உண்மையில் 285 ஏக்கர் மட்டுமே கொண்ட சிறிய தீவாகும். இதன் அதிகபட்ச அகலமே 300 மீட்டர்கள் தான், நீளம் 1.6 கி.மீ ஆகும்.
கச்சத்தீவு அமைந்திருக்கும் இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையிலான இடம் மிக குறுகியது என்பதால், கிட்டத்தட்ட இந்திய பொருளாதார மண்டலம் முடியும் இடத்திலேயே இலங்கையின் பொருளாதார மண்டலம் தொடங்குகிறது. எனவே மீனவர்கள் அடிக்கடி இலங்கையின் பொருளாதார மண்டலத்துக்குள் நுழையும் நிலை ஏற்படுகிறது.
1974ம் ஆண்டு இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அப்போது இந்திய பிரதமராக இந்திரா காந்தியும் தமிழ்நாட்டில் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வந்தது. .அந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை வரையறுக்கப்பட்டு கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என முடிவானது.ஆனால், அதன் பின் 1976ம் ஆண்டு, இரு நாடுகளுக்கு இடையே மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, "இந்திய மீனவர்களும் அவர்களது மீன் பிடிப் படகுகளும் இலங்கைக் கடல் பகுதியிலும் இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலப் பகுதியிலும் இலங்கையின் அனுமதியில்லாமல் மீன்டிபிடிக்க அனுமதி இல்லை" என்று கூறியது இந்த ஒப்பந்தத்தின் ஷரத்து.
கச்சத்தீவு குறித்து ஜஹவர்லால் நேருவிடம் முன்னர் கேட்ட போது, இத்தகைய சிறு தீவுகளை இணைப்பது குறித்து முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம்; இந்த சிறு தீவுகளின் மீதான உரிமையை விட்டுக்கொடுக்கவும் தயங்கமாட்டோம் என்றார். அந்த கட்சியுடன் தான் திமுக கூட்டணி வைத்துள்ளது. குறிப்பாக அப்போது திமுக அரசின் மீதுஊழல் வழக்குகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் அரசியல் களத்தில் அவ்வபோது ஒலித்துக் கொண்டே இருக்கிறது திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கச்சத்தீவு பிரச்சனையை அரசியலாக்கி மீனவர்களை ஏமாற்றி மீனவர்கள் வாக்குகளை வாங்கி வருகிறார்கள் இது குறித்து ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத்தீவை மீட்கும் காலம் கனிந்து வருகிறது. கச்சத்தீவை மீட்பதில் பாஜக உறுதியாக உள்ளது. மேலும் அண்ணாமலை இரு முறை இலங்கை சென்று அங்கு இருக்கும் சூழ்நிலையை குறித்து பிரதமர் மோடியிடம் ரிப்போர்ட் அளித்துள்ளார்.
ஏற்கனவே பா.ஜ.க நடத்திய கடல் தாமரை மாநாட்டில்,மீனவர்கள் சங்கம் சார்பில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அதன்படி, மீனவர்களுக்கு கடன் வழங்குவதற்கு வங்கிகள் வாயிலாக கடன் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. மீன்வளத்துறைக்கு புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டு உள்ளது.கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் நிலுவையில் உள்ளது. மத்திய பா.ஜ.க ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல்கள், சுட்டு கொல்லப்படுவது குறைந்துள்ளது.தற்போது, கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ள பிரதமர் மோடி, நிச்சயம் மீட்டுத் தருவார். என மீனவர் அமைப்புகள் கூறியுள்ள நிலையில் இலங்கை செல்லும் மோடி கச்ச தீவு குறித்து பேசுவார் என்ற செய்திகள் வெளியான நிலையில் தமிழக சட்டப்பேரவையில் கச்ச தீவை தாரை வார்த்த திமுக மீண்டும் கச்சத்தீவை மீட்க தீர்மானம் போட்டு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது .