Tamilnadu

திடீர் என பரவும் செய்தியால் அதிர்ந்து போன கரூர் தரப்பு..!செந்தில் பாலாஜிக்கு முழுக்கு..! வெடித்த பஞ்சாயத்து...! திமுக எடுத்த அதிரடி முடிவு.

senthilbalaji.mkstalin
senthilbalaji.mkstalin

சட்டவிரோதப் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப் பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி,472 நாள்களுக்குப் பிறகு, 26-9-2024 அன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த இரண்டே நாள்களில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு தியாகி பட்டம் சூட்டி அமைச்சராக்கினார் . அப்போதே இது தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.


இந்த நிலையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத்துறையின் சோதனையால் மிரண்டுபோய்க் கிடக்கிறது கோபாலபுர குடும்பம் . ஏனென்றால் கோபாலபுர குடும்பத்துடன் நெருங்கிய டாஸ்மாக் அதிகாரியின்  மொபைல் போன்களிலிருந்து பல்வேறு தகவல்களை எடுத்துச் சென்றுள்ளது அமலாக்கத்துறைள், அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியிருக் கிறார்கள்.அந்த  அதிகாரியிடமிருந்து எடுத்துச்செல்லப்பட்ட தகவல்களிலிருந்து, விவகாரமான ஐந்து டாக்குமென்ட்டுகள் சிக்கியிருக்கின்றனவாம். சில மதுபான ஆலைப் பிரமுகர்களுடன் அவர் பகிர்ந்த தகவல்களையும் தோண்டியெடுத்திருக்கிறது அமலாக்கத்துறை. விரைவிலேயே, அந்த உச்ச அதிகாரியிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டிருக்கும் அமலாக்கத்துறை, அவருடைய போனிலிருந்து எடுக்கப்பட்ட அனைத்து முக்கிய ஆவணங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கத் தயாராகிறதாம். இதை தடுக்கவே தமிழக அரசு டாஸ்மாக் நநிறுவனம் அமலாக்கத்துறை சோதனை குறித்து வழக்கு தொடர்ந்தது. 

அமலாக்க துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் வகையில், முன்கூட்டியே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.சோதனை நடத்துவதற்கான வாரண்டை காட்டி, வலுக்காட்டாயமாக கையெழுத்து பெற்றதாக தமிழக அரசு கூறிய குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. சோதனைக்காக வாராண்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

சோதனைக்கு எதிராக அமலாக்கத் துறையிடம் முறையிடும் மாற்று வாய்ப்பு உள்ள போதும், அதை அணுகி நிவாரணம் கோராமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியது தவறு.டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டது. என அமலாக்க துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தி.மு.க அமைச்சர்கள் ஆறு பேரைக் குறியும் வைத்திருக்கிறதாம் டெல்லி . அதில் முதலிடத்தில் இருப்பது, செந்தில் பாலாஜிதானாம். உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் அமலாக்கத்துறையின் வழக்கு, அவரின் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது. ‘அந்தக் கத்தி எப்போது வேண்டுமானாலும் அவரது பதவியைக் காவு வாங்கும்’ என்கிறார்கள் நீதித்துறை வட்டாரத்தில். ‘ நீதிமன்றம் முடிவு எடுப்பதற்கு முன்பாக ‘அமைச்சரவைக்குள் பாலாஜியை வைத்துக்கொள்வதா, வேண்டாமா...’ என்கிற முடிவை எடுக்கவேண்டிய நெருக்கடியில் இருக்கிறது ஆட்சி மேலிடம்.  அது மட்டுமில்லாமல் டாஸ்மாக் விவகாரத்தில் யாரை காவு கொடுபப்து என்பதிலும் முதல் ஆளாக கரூர்காரர் தான் உள்ளாராம்.  அமலாக்கத்துறையின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ‘பாலாஜியின் தம்பி அசோக்குமார் உள்ளிட்டோர், வரும் ஏப்ரல் 9-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்’ எனச் சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை முதன்மை நீதிமன்றம்.”

இப்படி அமைச்சர்களை டெல்லி குறிவைத்திருக்கும் நிலையில், கூட்டணிக்குள்ளும் பிரச்னை தறிகெட்டு ஓடத் தொடங்கியிருக்கிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தங்களின் கட்சியின் கொள்கை சார்ந்து பேசும் சில விஷயங்கள் தி.மு.க ஆட்சிக்கு எதிராகவும் அமைந்துவிடுகின்றன. மதுரையில் நடந்துவரும் சி.பி.எம் அகில இந்திய மாநாட்டுக்காக, அந்தக் கட்சியின் பொலிட் பீரோ ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ‘கூட்டணியில் இருப்பதாலோ, தேர்தல் கூட்டணிக்காகவோ... நம்முடைய கொள்கையில் சமரசம் செய்துகொள்ள முடியாது’ என தி.மு.க-வை மறைமுகமாகச் சாடியிருக்கிறார்.மறுபக்கம் கூட்டணியைக் கலைக்கவும் பிளான் நடக்கிறது. அதனால், இனி தேர்தல் வரை, தி.மு.க-வின் மனநிலை ‘திக்... திக்...’