24 special

இந்திய ராணுவத்தில் மேலும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்..!

Rajnath singh
Rajnath singh

புதுதில்லி : இந்திய பாதுகாப்புப்படைகள் நவீன ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பலவற்றை ஏற்றுக்கொண்டுள்ளன. தங்களை அணுகும் நபர் எதிரியா அல்லது நண்பரா என்பதை தீர்மானிக்கும் அமைப்புக்கள் முதல் சைகை அங்கீகாரம் வரையிலான பல AIக்களை இந்திய பாதுகாப்பு படைகள் பயன்படுத்திவருகின்றன.


இந்நிலையில் இந்திய ராணுவத்தில் ஆண்டுதோறும் சாலைவிபத்தில் 300 பேர் மரணிப்பதாக அறியப்படுகிறது. இதனால் புதிதாக பயன்படுத்தப்பட போகும் AI சாலைவிபத்தை கடுமையாக குறைக்கும் என கருதப்படுகிறது. ராணுவ விமானப்படை மேட்டரும் கடற்படை மற்றும் கடலோர காவற்படை அமைப்புகளுக்கு இனிவரும் நாட்களில் பயன்படுத்த 75 AIக்களை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிமுகப்படுத்திவைக்கிறார்.

மேலும் இதுபோல 100 AIக்கள் தயாரிப்பில் உள்ளன. பெங்களூருவை சேர்ந்த பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் பொதுத்துறை நிறுவனம் ராணுவ வாகனத்தின் ஓட்டுனரை எப்போது மாற்றுவது என்பதை உயரதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்க ட்ரைவர் சோர்வு கண்காணிப்பு AIயை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்நேர AI ஓட்டுநர் சோர்வாக இருந்தாலோ அல்லது சோர்வாக இருந்தாலோ அதை துல்லியமாக கணித்து அடையாளம் கண்டு எச்சரிக்கை அனுப்பும். 

மேலும் ட்ரைவர் கேபினுக்குள் இருக்கும்போது ஒரு கேமரா தொடர்ந்து அவரை படமெடுக்கும். மேலும் இந்த கண்டறிதல் அமைப்பு ட்ரைவர் கண்கள் திறந்துள்ளதா மூடியுள்ளதா என புத்திசாலித்தனமான வகையில் கண்டறிந்து சிக்னல் அனுப்பும். மேலும் தூக்கமில்லா அல்லது தூக்கமின்மைக்கான அறிகுறிகளை துல்லியமாக அடையாளம் காணுகிறது.

இதனிடையே பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இன்னொரு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் சைகை அங்கீகார AIயை உருவாக்கியுள்ளது. இது குறிப்பிட்ட எல்லைக்குள் வந்தவுடன் வருபவர் நண்பரா அல்லது எதிரியா என்பதை காட்டிக்கொடுத்துவிடும்.

ஒரு மனிதன் துப்பாக்கியுடன் நடப்பது துப்பாக்கி இல்லாமல் நடப்பது போன்றவற்றையும் ஊர்ந்து செல்வது அல்லது குனிந்து செல்வது உள்ளிட்ட அனைத்து சைகைகளையும் கண்காணித்து காவலருக்கு செய்தி அனுப்பும்.