24 special

சோணமுத்தா கோவாவும் போச்சா..? கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..!

Bjp
Bjp

கோவா : கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி தலைவர்களான சோனியா மற்றும் ராகுல்காந்தி இருவரும் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த கட்சி மாநாட்டில் காங்கிரசில் சீர்த்திருத்தத்தை அறிவித்திருந்தனர். அவர்கள் அறிவித்த அடுத்த நாளில் இருந்தே பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பலர் ராஜினாமா செய்துவிட்டு பிஜேபியில் இணைந்தனர்.


இந்நிலையில் காங்கிரசின் மாநில தலைமைக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரசிலிருந்து விலகி பிஜேபியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவாவின் மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான திகம்பர் காமத் தலைமையிலான ஆறு எம்.எல்.ஏக்கள் கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மேலும் அவர்களின் அதிருப்தி செயல்பாட்டு நடவடிக்கை எந்நேரமும் வெளிப்படலாம் என்பதால் மாநில காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல ஆறு முதல் பத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிஜேபியில் இணைய உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏவான மிக்கேல் லோபோ  கூறுகையில் " பிஜேபி எங்கள் உறுப்பினர்கள் குறித்து வதந்தியை பரப்பி வருகிறது.

எங்கள் எம்.எல்.ஏக்கள் யாரும் அதிருப்தியில் இல்லை. நான் என் வீட்டில் தான் இருக்கிறேன். இந்த தகவலை யார் பரப்புகிறார்கள் என தெரியவில்லை. நான் எங்கும் செல்லவில்லை" என செய்தியாளர்களிடம் லோபோ தெரிவித்துள்ளார். 40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டசபையில் பிஜேபி கூட்டணி 25 பேரும் காங்கிரசுக்கு 11 எம்.எல்.ஏக்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2024ல் நடைபெற இருக்கும் தேர்தலை மனதில் வைத்து பிஜேபி தனது பலத்தை அதிகரிக்க நினைப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் நாளை காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் எனவும் தலைமை கூறியிருப்பதாக செய்திகள் உலவுகின்றன.