கர்நாடகா :மங்களூரு புறப்பகுதியான முன்னூர் கிராமத்தில் உள்ள தெவுலாவை சேர்ந்தவர் மம்தா. இவர் குத்தர் உச்சி பகுதியில் அங்கன்வாடி உதவி ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு நிரந்தர அங்கன்வாடி ஊழியராக ஆசை. ஆனால் அதற்க்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். தனது கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என பயந்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜெய் ஹனுமான் கிரீடா மங்களாவில் தீவிர உறுப்பினராக உள்ள அவர் பாப்புகத்தே பகுதியில் அமைந்துள்ள ஹீரோ மகளிர் கலோரியின் முதல்வரான பாகீரதியை தொடர்புகொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய மம்தா " நான் அங்கன்வாடி ஊழியர் ஆகவேனும் என்பதே எனது கனவு. என் கனவை நிறைவேற்ற ஹனுமானே எனக்கு பாகீரதியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பரீட்சை வரும்வரை நான் பாகீரதி மேடம் வீட்டிலேயே இருந்தேன். என்னை தேர்வுக்கு முற்றுலும் தயார்படுத்தினார் பாகீரதி. நான் ஒரு தனிப்பட்ட தேர்வாளராக கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றுள்ளேன். எனது மகள் குஷியும் நானும் ஒரேநேரத்தில் தேர்வெழுதி வெற்றிபெற்றுள்ளோம். எனது மகள் குஷி சிறப்பிடம் பெற்றுள்ளார்.
இந்த தருணத்தை எனது வாழ்வில் மறக்கவே முடியாது. கணிதம் எனக்கு விருப்பப்பாடம். ஆனால் ஆங்கிலம் எனக்கு மிக கடினமாக இருந்தது. எனக்கு எழும் சந்தேகங்களை எனது மகள் தீர்த்து வைப்பார். அவர் ஆங்கிலத்தில் தேர்வெழுத நான் கன்னட மொழியில் தேர்வெழுதினேன். என்னை சுற்றியுள்ளவர்களும் கல்விகற்க நான் விரும்புகிறேன்.
அதனால் ஜெய் ஹனுமான் கிரீடா மண்டலியை சேர்ந்த சிலருடன் இணைந்து இலவசக்கல்வியை வழங்கிவருகிறோம். 21 ஆண்டுகளுக்கு முன்னர் என்னால் பத்தாம்வகுப்பு முடிக்க முடியவில்லை. ஆனால் இப்போது முடித்துவிட்டேன். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை இந்த கல்வி தந்திருக்கிறது" என மம்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.