24 special

மிஸ்டர் செந்தில் திரும்பி போ.. ங்கள் மதுரைக்கு செல்லும் செந்திலுக்கு பாஜக கொடுத்த அதிர்ச்சி !

Mp senthilkumar
Mp senthilkumar

மதுரைக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள செந்தில் வருவதாக தகவல் வெளியான நிலையில், செந்திலுக்கு எதிர்ப்பாக பல்வேறு தரப்பிலும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன, இந்த சூழலில் நாடாளுமன்ற உறுப்பினர் செந்திலின் சமீபத்திய பூமி பூஜைக்கு எதிரான கருத்தை முன்வைத்து பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் GOBACK SENTHIL என்று பதிவிட்டுள்ளார்.


இது குறித்து அவர் பதிவிட்டது பின்வருமாறு : "Go Back மிஸ்டர் செந்தில் இன்று நீங்கள் ஓர் அரசு விழாவிற்காக மதுரை வருவதை மதுரை மக்கள் விரும்பவில்லை.மிஸ்டர் செந்தில் நீங்கள் தர்மபுரியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் ஆனால் நீங்கள் எந்த தர்மத்தின் படியும் நடந்து கொள்ளவில்லை.

பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்ற உறுப்பினரான நீங்கள் அதே மக்களின் ஆன்மீக நம்பிக்கையை காயப்படுத்தி இருக்கிறீரகள் பூமி பூஜை நடந்து கொண்டு இருந்தபோது அதை தடுத்து நிறுத்தியது மட்டும் இல்லாமல், அந்த இடத்தில் நீங்கள் பேசிய பேச்சும் நடந்து கொண்ட விதமும், அதிகாரிகளை மிரட்டியதும் அருவருக்கத் தக்கதாக இருந்தது.

This is unbecoming of a member of parliament உங்களது மத நம்பிக்கை என்ன என்பது அல்ல கேள்வி..மக்களின் நம்பிக்கையை ஏளனப்படுத்தி இருக்கிறீர்கள் உங்களுக்கு ஒன்றை நினைவு கூறுகிறேன், "பெரியார் சமத்துவபுரம் என்ற பெயரில் தமிழகமெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபோது ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்.

தமிழ்நாட்டில் ஈ வெ ரா   பெயரில் உள்ள அனைத்து சமத்துவபுரங்களும் பூமி பூஜை செய்துதான் திமுக ஆட்சியில்... கருணாநிதி முதல்வராக இருந்தபோது கட்டப்பட்டது" என்பது தெரியுமா மிஸ்டர் செந்தில்?? அப்போதெல்லாம் எங்கே போயிருந்தீர்கள்?? உங்கள் பகுத்தறிவு ஆவேசம் எங்கே ஒளிந்து கொண்டது??

"கருணாநிதி ஆட்சியில் பூமி பூஜை செய்வதும், ஸ்டாலின் ஆட்சியில் பூமி பூஜை காயப்படுத்துவதும் உங்களுக்குக் கேவலமாக இல்லையா!? இன்று நீங்கள் மதுரைக்கு வருகிறீர்கள், உங்களை மதுரை மக்கள் வரவேற்கவில்லை, நீங்கள் வருவதை மதுரை மக்கள் விரும்பவில்லை, ஆன்மீக உணர்வுகளை காயப்படுத்துவது யாராக இருந்தாலும் மதுரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஒரு திமுக தலைவர் மீனாட்சி அம்மனை ஏளனம் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட போது விஸ்வரூபம் எடுத்து அந்த தலைவரை விரட்டி அடித்தவர் ஐயா பசும்பொன் தேவர்" அவர் வாழ்ந்த இந்த மதுரை மண்ணில் உங்களைப் போன்று ஆன்மீக உணர்வு,

ஆன்மீக உணர்வுகளைக் காயப்படுத்துபவர்களை இந்துக்களை ஏளனம் செய்பவர்களை, தமிழர்களின் மரபுகளை மதிக்காதவர்களை  நாங்கள் வரவேற்கவில்லை மிஸ்டர் செந்தில் என ஆணித்தரமாக தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார் பேராசிரியர் ஸ்ரீனிவாசன்.