Tamilnadu

"பேராசிரியர்" அடித்த அடி இந்தமுறை நீதிமன்றமே அனுமதி கொடுத்தது, இனிதான் இருக்கு ஆட்டம் !

rama srinivasan
rama srinivasan

தமிழக அரசியலில் பாஜக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது, குறிப்பாக தென் மாவட்ட மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை மத்திய அரசின் உதவியுடன் தென் மாவட்டங்களுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அதில் ஒன்றுதான் விருதுநகர் மாவட்டத்தில் தொழிற் பூங்கா அமைக்கும் முத்தான திட்டம்.


இந்த திட்டம் அமைவதில் மாநில அரசு முட்டுக்கட்டை போடுவதாக கூறி பணிகளை விரிவு படுத்தவும் பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தலைமையில் மிக பெரிய விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கையிலும் பாஜகவினர் இறங்கினர்.

ஆனால் நடைபயணம் மேற்கொள்ள விருதுநகர் சென்ற பாஜகவினரை காவல்துறை மூலம் கைது செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டதாக குற்றசாட்டு எழுந்தது, இந்த சூழலில் எடுத்த முயற்சியில் பின்வாங்காமல் இருக்க நீதிமன்றத்தை நாடியது பாஜக நீதிமன்றம் ஜனநாயக முறையை பின்பற்றி நடக்கும் பாஜக போராட்டத்திற்கு தடை விதிக்க கூடாது என அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அது பின்வருமாறு : நீதி வென்றது பாஜகவுக்கு வெற்றி, மத்திய  நரேந்திர மோடி அரசின் ஜவுளி பூங்கா திட்டங்கள் விருதுநகர் மாவட்டத்தில் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக விருதுநகர் மேற்கு மாவட்டம்  நடத்த இருந்த பாதயாத்திரை திமுக அரசால் தடை செய்யப்பட்டது.

அது மாத்திரம் அல்ல நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு ஒரு நெருக்கடி கால சூழ்நிலையை விருதுநகர் மாவட்டத்தில் உருவாக்கியது திமுக அரசு.இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற பெஞ்சில் பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை 25ஆம் தேதி அதே நடைபயணப் பேரணியை நடத்தலாம் என்றும் அதற்கான உரிமை பாஜகவிற்கு உண்டு என்றும் அரசாங்கம் அதை தடுக்கக் கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி தேதியில் மட்டும் மாற்றம் செய்து 25ஆம் தேதி திங்கட்கிழமை மறுபடியும் அதே நடைபயண பேரணியை நாம் நடத்துவோம்.வெற்றி நமதே என குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் நடை பயண பேரணி விருதுநகர் மாவட்டத்தை தாண்டி தமிழக அளவிலும் பிரபலம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.