24 special

கசிந்த மும்பை குட்டி காலாட்டாக்கள்...! ஒதுக்கப்பட்டாரா முதலவர் ஸ்டாலின்...?

mk stalin
mk stalin

எதிர்க்கட்சி கூட்டணிகள் உருவாக்கியுள்ள இந்தியா கூட்டத்தின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கூட்டத்தில் பல சர்ச்சைகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன. மேலும் இந்த கூட்டத்தில் 26 கட்சிக்கும் மேற்பட்ட 63 பிரதிநிதிகள் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான யூகங்களையும் தொகுதி பங்கீடுகள் பிரதம வேட்பாளர் நியமப்பது மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்தது.


மேலும் ஏற்கனவே எதிர் கட்சி கூட்டணிக்கு உள்ளே பல முரண்பாடுகள் நீடித்து வரும் நிலையில் கண்டிப்பாக இந்த கூட்டத்திலும் அது கண்டிப்பாக எதிரொலிக்கும் என்று ஏற்கனவே அரசியல் வல்லுநர்களால் கூறப்பட்டது. காரணம் டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே தொகுதி பங்கிட்டு பிரச்சனை இருந்து வருகிறது, அது மட்டும் அல்லாமல் தெலுங்கானா சத்தீஸ்கர் மகாராஷ்டிரா ராஜஸ்தான் முதலிய மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் வருவதால் எதிர்க்கட்சிக்கு உள்ளே போட்டிபோட்டு கொண்டு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது இந்தியா கூட்டணியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஒரு பக்கம் எதிர்க்கட்சி கூட்டணியில் முக்கிய தலைவராக பார்க்கப்படும் சரத் பவார் அஜித் பவர் உடன் நெருங்கி பழகுவது கட்சிக்குள்ளே கிசுகிசுப்பை ஏற்படுத்தி உள்ளது,மேலும் செப்டம்பர் 1 அன்று கூடிய எதிர்கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது முதல் தீர்மானமாகவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை இந்தியா கூட்டணியில் இருக்கும் எதிர்க்கட்சிகள் முயன்றவரை இணைந்து பணியாற்றுவோம் என்று கூறியதுடன் தொகுதி பங்கீட்டுக்காக கட்சிக்குள்ளே அடித்துக் கொள்ளாமல் விட்டுக் கொடுத்து  செல்ல முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இரண்டாவது தீர்மானமாக நாட்டில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி நம் நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்

இது மட்டுமல்லாமல் இணையும் இந்தியா வெல்லும் பாரதம் என்ற கொள்கையை மையப்படுத்தி நாடு முழுவதும் ஊடகங்களில் பிரச்சாரங்களை பரப்புவதற்கும் முடிவு செய்திருப்பதாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒருங்கிணைப்பு குழுவில்தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா மேலும் பல முக்கிய தலைவர்களும் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் கூட்டணியை வலுப்படுத்த என்ன முயற்சிகள் செய்தாலும் முதல் தீர்மானமாக முயன்ற வரை ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கூறியதிலேயே கூட்டணியின் பலம் என்ன என்று தெளிவாகத் தெரிகிறது என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனாலும் பிரதமர் ஆசையில் மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டணியில் இருந்து பிரிந்து செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த கூட்டத்திலேயே பிரதம வேட்பாளரை நியமித்து விடலாம் என்று கூறியது வேறு பிற கூட்டணி கட்சி தலைவர்களால் புறக்கணிக்கப்பட்டதாக வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. இப்படி திட்டம் ஒன்று செய்து கடைசியில் அது நடைபெறாமல் வெறுமனே புகைப்படம் எடுத்து கலைந்து சென்றுள்ளது I.N.D.I.A கூட்டணி என விமர்சனங்கள் எழுந்துள்ளது.