உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகனான கௌதம சிகாமணி நாடாளுமன்ற எம்பியாக பதவியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண்குவாரியில் மோசடி செய்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் . மேலும் கௌதம சிகாமணி வெளிநாடுகளில் இந்திய பணத்தை முதலீடு செய்து அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளார் என்ற பெயரில் அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது செம்மண் சுரண்டல் மோசடி நடைபெற்றதில் முக்கிய குற்றவாளியாகவும் கௌதம சிகாமணி பார்க்கப்பட்டார்,
இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் அவரது மகன் கள்ளக்குறிச்சி திமுக எம்.பியுமான கவுதமசிகாமணி மற்றும் அவரது உறவினர் ஜெயச்சந்திரன் ராஜமகேந்திரன் கோபிநாத் கோதகுமார், சதானந்தன லோகநாதன் உள்ளிட்டோர் செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ. 28 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ல் வழக்குப் பதிவு செய்தனர்.அதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட எம் பி ஆக இருக்கும் கௌதம சிகாமணி மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் பதிந்த வழக்கு எம்எல்ஏ மற்றும் எம்பிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
ஆனால் இந்த வழக்கு விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தியதில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது, மேலும் இந்த சோதனையின் முடிவில் அமைச்சர் பொன்முடி மற்றும் கௌதம சிகாமணியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது அமலாக்கத்துறை. அமைச்சர் பொன்முடியை சுற்றி வளைப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுபட்டிருந்தார். மேலும் இந்த வழக்கில் கௌதம சிகாமணி மற்றும் வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களுக்கு எதிராக 90 பக்கம் குற்றப்பத்திரிக்கையை சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு சமர்ப்பித்தார்.
இந்த வழக்கில் கௌதம சிகாமணிக்கு எதிராக தாக்கல் செய்த 90 பக்க குற்ற பத்திரிகையை கணக்கில் எடுத்துக் கொண்டு நீதிபதி அல்லி விசாரணை நடத்தியதில் இந்த வழக்கை எம்பி எம்எல்ஏக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உத்தரவை பிறப்பித்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. கௌதம சிகாமணி எம்பியாக இருப்பதால்தான் இந்த வழக்கை நீதிபதி அல்லி எம்.பி எம்.எல்.ஏ'க்களுக்கான நீதிமன்றத்திற்கு மாற்றி உள்ளார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த வழக்கு இரண்டாவது சிறப்பு நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு செப்டம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்த சிறப்பு நீதிமன்றம் ஆவது கௌதம சிகாமணி வழக்கை முறையாக விசாரிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக கௌதம சிகாமணிக்கு சிறை தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது, அப்படி சிறை தண்டனை எம்.பி கௌதம சிகாமணிக்கு கிடைக்கும்பட்சத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் அவர் போட்டியிட முடியாதபடி சட்ட சிக்கல் வரும் எனவும் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் அமைச்சர் செந்தில்பாலாஜி போல இவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க நிறைய வாய்ப்பிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.