தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்மன் என் மக்கள் என்ற நடை பயணத்தை கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து ஆரம்பித்த நிலையில் இந்த யாத்திரையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். கடந்த ஜூலை மாதம் தொடங்கிய நடை பயணம் இன்று வரை வெற்றிகரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் நடைபயணம் தொடங்கிய முதல் நாள் அன்றே மக்களின் வரவேற்பு உச்சத்தை தொட்டது மேலும் இந்த நடை பயண த்தின் மூலம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மோடி தலைமையில் ஒன்பது ஆண்டுகால சாதனைகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தார்.
அதுமட்டுமில்லாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடை பயணத்தை பற்றி மக்கள் அனைவரும் நேர்மறையான கருத்துக்களை சமூக ஊடகங்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூட கூறி வந்தனர்.மேலும் இந்த நடை பயணம் திட்டமிட்டபடி ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி தூத்துக்குடி கன்னியாகுமரி மதுரை என அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடந்து வந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் நடைபயணம் ஒரு இடங்களில் கூட சறுக்காமல் சரியாக நடைபெற்று வருகிறது மேலும் செப்டம்பர் மாதத்திற்கான என் மன என் மக்கள் நடைபயணத்தின் அட்டவணையை அதன் ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ளது அதாவது இந்த நடைபயணம் செப்டம்பர் மாதத்தில் எந்தெந்த ஊர்களில் நடைபெறுகிறது என்றும் அதற்கான தேதிகள் உடன் எந்த ஊர் வழியாக செல்கிறது போன்ற விவரங்களையும் அமர் பிரசாத் ரெட்டி அட்டவணையாக வெளியிட்டுள்ளார்.
அதாவது செப்டம்பர் மாதம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணத்தை ஆலங்குளம் தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் முதலிய ஊர்களைத் தொடர்ந்து உசிலம்பட்டி ஆண்டிபட்டி திண்டுக்கல் நிலக்கோட்டை பழனி ஒட்டன்சத்திரம் வழியாக ஊட்டி மேட்டுப்பாளையம் அவிநாசி கோயம்புத்தூர் பவானிசாகர் சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
மேலும் இந்த ஊர்களில் பல நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளும் இருக்கின்றன தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் முதற்கட்ட நடைபயணத்தில் திமுகவிற்கு கடும் பின்னடைவும் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் கணிசமான அளவு வாக்கு வங்கியும் எகிறியது. திமுகவினர் அண்ணாமலையின் நடைபயணத்தை விமர்சித்து ஆரம்பத்தில் போஸ்டர்கள் பேனர்கள் கூட்டு பிரச்சாரங்கள் என பலவற்றை மேற்கொண்டாலும் அதை எல்லாம் தகர்த்துவிட்டு தற்போது நடை பயணம் வெற்றியின் உச்சத்தை தொட்டதால் திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இந்த நடைபயணம் மக்களின் வாக்கு வங்கியை அதிகரித்ததால் பாஜகவினர் மிகுந்த குஷியில் இருக்கும் நிலையில் திமுகவினர் கடுப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிகிறது இதனால்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ராமநாதபுரம் சென்றுள்ளார் மேலும் அண்ணாமலையின் நடை பயணத்திற்கு கிடைத்த வரவேற்பை இராமநாதபுரத்தில் ஒட்டியுள்ள பேனர்கள் போஸ்டர்கள் மூலம் கண்டுகொண்ட தமிழக முதல்வர் தற்போது களம் மாறிவிட்டது தீவிரமாக மக்களை நம் பக்கம் ஈர்ப்பதற்கு முயற்சிகளில் இறங்க வேண்டும் என திமுக நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
பாஜக சற்று பின்தங்கிய தென் கடலோர மாவட்டங்களே இப்படி களம் மாறும்போது, பாஜக வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தில் என்ன ஆகுமோ என திமுக இப்பொழுதே அதீத பயத்தில் உள்ளதாகவும், இதே ரீதியில் சென்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை மக்களிடம் இருந்து பெற முடியும் என்பதற்காகவும் அதிக எம்பி தொகுதிகளை பெற முடியும் என்பதற்காகவும் அசுர பலத்துடன் இறங்க இருக்கிறது பாஜக எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.