24 special

ராகுல் காந்தி போல் சிக்கலில் மாட்டப்போகும் உதயநிதி ஸ்டாலின் வெடிக்க போகும் பூகம்பம்!

rahul gandhi , udhayanithi stalin
rahul gandhi , udhayanithi stalin

2013 ஆம் ஆண்டு நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்த பொழுது அதற்கான எதிர்ப்புகள் மேலோங்கி இருந்தது மருத்துவம் படிக்க முடியவில்லை என்று சில பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது பின்னர் சில மாணவர்களின் உயிர்களும் போனது. 


அதற்குப் பிறகு ஒவ்வொரு பள்ளிகளிலும் ஊக்கம் அளிக்கப்பட்டு இதற்கான பயிற்சி வகுப்புகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாக நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்று அரசு பள்ளிகளில் தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும் நீட் தேர்வால் தற்போது இரண்டு உயிர்கள் பறி போனதால் நீட் எதிர்ப்பை மறுபடியும் திமுக அரசு தனது அரசியல் காரணங்களுக்காக கையில் எடுத்துள்ளது என கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து தான் என்று கூறி வந்தன ஆனால் இதுவரை எந்த ஒரு மாற்றத்தையும் அவர்களால் செய்ய முடியவில்லை இதனை பொறுக்க முடியாமல் தற்போது மீண்டும் அதே காரணத்தை கூறி அதாவது நீட்டால் மாணவ மாணவிகளின் உயிர்கள் பறிபோகிறது அதனை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக மத்திய அரசையும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியையும் எதிர்த்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக திமுக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் அதில் இளைஞர் அணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உள்ள உதயநிதி கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.  சென்னை தவிர பிற மாவட்டங்களின் தலைநகரங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் அதில் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் காலை 9 மணி முதல் 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி மட்டும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டால் அவரது பதவிக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது அரசியலமைப்பு சட்டம் 164 ன்படி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரமாணத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தால் அது Breach Of Oath.உச்சநீதிமன்றம் நீட் தேர்வு செல்லும் என தீர்ப்பளித்துள்ள நிலையில் உண்ணாவிரதமிருப்பது நீதிமன்ற அவமதிப்பும் ஆகும் என்று பதிவிட்டுள்ளார். 

இருப்பினும் சட்ட விதிமுறைகள் அனைத்தையும் மீறி உதயநிதி உண்ணாவிரதம் மேற்கொண்டால் அவர் விதிகளை மீறி செயல்பட்டுள்ளார் என்று அமைச்சர் உதயநிதி மீது வழக்கு தொடர முடியும் எனவும்,  இதன் காரணமாக உதயநிதி தனது பதவியை இழக்க நேரிடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே ராகுல் காந்தி பிரதமரை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட இனத்தை விமர்சித்து நீதிமன்ற வழக்குகளில் சிக்கி தனது பதவியை இழந்து, அதற்குப் பிறகு நீதிமன்றங்களுக்கு சென்று நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது உதயநிதிக்கு நடந்தாலும் ஆச்சரியமில்லை, அதனால் உதயநிதி அமைச்சர் பதவி ஏன் எம்.எல்.ஏ பதவிக்கு கூட  சட்ட ரீதியாக ஆபத்து வரும் அதற்கான வாய்ப்புகள் அனைத்தும் இருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர்.