24 special

மாற்றப்பட்ட எப்ஐஆர்...? வெளிச்சத்துக்கு கொண்டுவந்த NIA..! திடுக்கிடும் பின்னணி..!


அமராவதி : அமராவதி நகரில் மருந்தாளுநராக இருந்த உமேஷ் கொல்ஹே (54) கடந்த ஜூன் 21 அன்று தனது இருசக்கரவாகனத்தில் இரவு 10 மணியளவில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இன்னொரு வாகனத்தில் உமேஷின் மனைவியும் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் உமேஷை வழிமறித்து வெட்டி கொலைசெய்தது.


இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆறுபேரை காவல்துறை கைது செய்தது. முடாஸிர் முஹம்மது, ஷாருக், அப்துல் தௌபீக், இர்பான் கான், ஷாஹிம் முஹம்மது, ஷோயப் கான் யூசுப் கான் ஆகியோரை கைது செய்த போலீசார் திருட்டு முயற்சியில் கொலைநடந்ததாக தனது எப்.ஐ.ஆரில் பதிவுசெய்தது. 

மாநில டிஜிபி இதுகுறித்து எந்த அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த கொலையில் சதித்திட்டம் அல்லது பயங்கரப்பின்னணி இருக்கலாம் என கருதிய பிஜேபியினர் மீண்டும் புகார் அளித்தனர். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் புகார் அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இந்த வழக்கை NIA விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின்னர் உடனடியாக வழக்கை தன்வசம் எடுத்துக்கொண்ட NIA பல திடுக்கிடும் தகவல்களை கண்டறிந்துள்ளது. நுபிரஷர்மாவிற்கு ஆதரவாக கொல்லப்பட்ட உமேஷ் சிறிதுநாட்களுக்கு முன்னர் ஒரு பதிவிட்டுள்ளார். அதனால் ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவினரை அச்சுறுத்த உமேஷ் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் பாணியில்  செய்யப்பட்ட பயங்கரவாத செயல் எனவும் தேசிய புலமை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட உமேஷின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் UAPA பிரிவியூ 16,18, மற்றும் 20 பிரிவு 34 , 153ஏ 153பி, 120பி மற்றும் 302 என்ற இந்திய தண்டனைச்சட்டங்களின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் NIA சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில்,

" கொல்லப்பட்ட உமேஷ் கொல்ஹே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மற்றும் பிறரின் சதித்திட்டத்தின் மிகப்பெரிய செயலாகும் குறிப்பிட்ட மதத்தின் அடிப்படையில் ஏற்பட்ட பகைமை உணர்வால் ஜூன் 21 அன்று இரவு 10 முதல் 10.30க்குள் இந்த பயங்கரவாத செயல் நடைபெற்றுள்ளது" என NIA தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த வழக்கில் அமராவதி போலீசார் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கொலை என்ற கோணத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தது. ஆனால் NIA தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் எந்த ஒரு பொருளும் கொள்ளையடிக்கப்படவில்லை என தெளிவாக கூறியிருக்கிறது. NIA விசாரணையை ஆரம்பித்த 24 மணிநேரத்திற்குள் இதுபோல பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த சதிச்செயலில் வெளிநாட்டின் பங்கு ஏதாவது இருக்கிறதா என NIA தீவிரமாக விசாரித்து வருகிறது.