24 special

பாகிஸ்தானில் ராணுவத்தை குவிக்கிறதா சீனா..? உற்றுநோக்கும் இந்தியா..?

pakistan
pakistan

பாகிஸ்தான் : சீனாவை சேர்ந்த பலர் பாகிஸ்தானில் பல தொழில்நிறுவனங்களை நடத்திவருகின்றனர். மேலும்  ஆயிரக்கணக்கானோர் பாகிஸ்தானிலேயே வசித்து வருகின்றனர். அவர்களின் உடைமைகளையும் அவர்களையும் பாதுகாப்பதாக கூறிக்கொண்டு பாகிஸ்தானில் சீனா தனது ராணுவத்தை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.


இதற்கான முறையான கோரிக்கையையும் சீனா பாகிஸ்தானுக்கு விடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.  மேலும் சமீபகாலமாக சீனர்கள் மீது பாகிஸ்தானியர்கள் தொடர்தாக்குதல்கள் நடத்திவருவதால் இந்த திட்டத்தை சீனா முன்னெடுத்திருப்பதாக பெய்ஜிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சீன பெல்ட் அண்ட் ரோடு முயற்சிக்காக கோடிக்கணக்கான நிதியை பாகிஸ்தானுக்கு வழங்கிவருகிறது.

இந்நிலையில் தான் இந்த விவாகரம் குறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள சீனாவின் உயர்மட்ட தூதரான யாங் ஜியெச்சி பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவால் பூட்டோ ஆகியோருடன் பேசுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை இந்திய தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த ராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா உற்று கவனித்து  வருகிறது. தூதரின் சந்திப்புக்கு பிறகே அப்படி ஒரு திட்டம் வெளிவந்துள்ளது. தேவைப்படும் பட்சத்தில் சீனா பாகிஸ்தான் ராணுவரீதியான ஒப்பந்தத்தை இந்தியா ராஜாங்க ரீதியாக எதிர்க்கும். தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்யும் என இந்திய தரப்பில் சொல்லப்படுகிறது.

மேலும் சீனாவின் இந்த திட்டத்திற்கு பாகிஸ்தான் அனுமதித்ததற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. சீனாவை கால்பதிக்கவிட்ட நாடுகளின் நிலையை பாகிஸ்தான் நிச்சயமாக அறிந்திருக்கும். ஆனால் அதேநேரத்தில் சீனா பாகிஸ்தானுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கும் என கருதபப்டுகிறது. அதனால் இறுதியில் சீனாவிடம் பாகிஸ்தான் பணிந்துவிடும் என உலக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   

கடந்த 2021ல் பாகிஸ்தானின் வடக்கு நகரமான தாசு பகுதியில் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பத்து சீனர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல 2022 தொடக்கத்திலேயே கன்பூசியஸ் நிறுவனத்தின் மீதும் அதன் தொழிலாளர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததாகவும் சிலர் உயிரிழந்ததாகவும் கூரப்பப்டுகிறது. இதை மேற்கோள் காட்டி சீனாவின் புறக்காவல்நிலையமாக பாகிஸ்தானை மாற்ற பெய்ஜிங் நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது.