Cinema

ரியல் KGF கதையாக மாறிவரும் சாம்ராஜ்யம்... மோடி செய்தது என்ன?

Modi, Naveen Kumar Gowda
Modi, Naveen Kumar Gowda

KGF திரைப்படத்தில் ராக்கி தனது டார்கெட் நோக்கி பயணிப்பது திரையில் பெரும் வரவேற்பை பெற்றது, பல வில்லன்களை வீழ்த்தி தனது சாம்ராஜ்யத்தை நிறுவி இருப்பார் ராக்கி அந்த திரைக்கதை அப்படியே பிரதமர் மோடிக்கு செட்டாகி இருக்கிறது. தற்போது காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் என பலரும் அளவுக்கு அதிகமான சொத்து சேர்ப்பு புகாரில் அமலாக்கதுறையில் விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.


இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து அரசியல் நோக்கர் சுந்தர்ராஜ சோழன் தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார் அது பின்வருமாறு :-

ஒரு நாள் தங்களின் சாம்ராஜ்யத்தின் வேரில் மோடி கைவைப்பார் என்று மட்டுமல்ல,அதன் தடத்தை ஆதியோடு பெயர்த்தெறிவார் என்றும் அவர்களுக்கு தெரியும்.

அந்த பதட்டமும்,பயமும் அவர்களை எப்படிப்பட்ட எதிர்விளைவின் உச்சத்துக்கு கொண்டு போகும் என அமைதியாக வேடிக்கை பார்த்தார்.

என்னை தொட்டு விடுவாயா? என்னை தொட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா என்றெல்லாம் பல மாய வித்தைகளை உள்ளும் புறமும் காட்டியபடியேதான் இருந்தார்கள்.

ஆதரவாளர்களும்,எதிர்ப்பாளர்களும் ஒரு சேர நீ ஒரு கோழை என்ற போது கூட அசைந்தே கொடுக்கவில்லை மோடி.அவர் கருமமே கண்ணாய் உள்ளார்.எல்லா பிழைகளுக்கும் மூலமாய்,சாட்சியாய்,துணையாய் எது இங்கே நிலைபெற்றுள்ளதோ அதை வேரோடு அப்புறப்படுத்துவது.

இது வெறுமனே 2014 க்கு பின்போ, ஏன் 1947 க்கு பின்போ கூட இந்த யுத்தம் துவங்கவில்லை.இந்த தர்ம பூமியை ஆள்வது யார்? என்பதில் அந்நியர்களுக்கும், பாரதியர்களுக்கும் இடையே நடக்கும் நூற்றாண்டு யுத்தமிது  என்று குறிப்பிட்டுள்ளார் சுந்தர் ராஜ சோழன்.