24 special

திருமாவளவனுக்கு "நச்" பதிலடி கொடுத்த நாராயணன் திருப்பதி !

Thirumavalan and narayana tirupathi
Thirumavalan and narayana tirupathi

உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள வழக்கு குறித்து கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவனுக்கு அதே பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி.


விசிக தலைவர் திருமாவளவன் அவரது சமூகவலைத்தள பக்கத்தில், சோசலிசம், செக்யூலரிசம் ஆகிய (சமதர்மம், மதசார்பின்மை) இரண்டையும் அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டுமாம். செப்-23 உச்சநீதிமன்றத்தில்சுப்ரமணிய சாமி தொடுத்த வழக்கு வழக்கு  விசாரணைக்கு வருகிறது.

இது சங்பரிவார்களின் ஒரே தேசம்- ஒரே நோக்கம். இவ்விரு கோட்பாடுகளையும் நீக்கிவிட்டால் ஏது சமூகநீதி?  ஏது சனநாயகம்? அரசமைப்புச் சட்டம்தான் சங்பரிவார்களின் கனவுத் திட்டத்துக்குப் பகையாக உள்ளது. சனாதன சமூகக் கட்டமைப்பைச் சிதைக்கிறது. எனவே,அவர்களின் உண்மையான- முதன்மையான ஒரே எதிரி  அரசமைப்புச் சட்டமே.

ஆகவே, அதனைத் தூக்கி எறிவதே அவர்களின் முழுமையான ஒரே நோக்கம்.அதனை சுப்ரமணியசாமி உறுதிப்படுத்துகிறார் என திருமாவளவன் பதிவிட்டு இருந்தார் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாராயணன் திருப்பது, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தில் சோசலிசம், செக்யூலரிசம் இவை இரண்டும் இல்லை. அவசரநிலையில் அவசரமாக கொண்டு வரப்பட்டவைகளே இவை.

அம்பேத்கர் அவர்கள் செய்தது சரியா? இந்திரா காந்தி செய்தது சரியா? ஓ! இப்போது காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளீர்கள், அதனால் தானா? என திருமாவளவனை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார் நாராயணன் திருப்பதி. தேவை என்றால் அம்பேத்கரை துணைக்கு அழைப்பதும் தேவை இல்லை என்றால் அம்பேத்கரை விலக்கி வைப்பதும் திருமாவிற்கு வேலையாகிவிட்டது என பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.