திமுக அமைச்சர் கொடுத்த பதிலடியில் சொந்த கட்சி எம்.பி செந்தில் வாயடைத்து போயிருக்கிறார், விநாயகர் சதுர்த்தி திருநாள் அன்று, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் என அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தது.
இதற்கு, தி.மு.க.வை சேர்ந்த தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் , “இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும்தான். கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல” – கலைஞர். சொன்னது கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது தவறில்லை; இந்து சமய அறநிலையத்துறையின் வேலையே அது தான்” என குறிப்பிட்டார்.
இது நேரடியாக இந்து சமய அறநிலையத்துறைக்கு பாடம் எடுத்த எம்பி செந்திலுக்கு கொடுத்த பதிலடியாக பார்க்க படுகிறது. செந்தில் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சொந்த கட்சியான திமுகவை சிக்கவைப்பது என்பது இது முதல் முறை இல்லை கடந்த முறை ஏன் இந்து முறைபடி மட்டும் பூஜை செய்கிறீர்கள் என சொந்த ஆட்சியில் உள்ள அதிகாரிகள் மீது செந்தில் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் செந்திலுக்கு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட திமுக வாய்ப்பு வழங்காது என்று அக்கட்சி வட்டாரங்களே பேசி வருகின்றனர்.