24 special

தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய தலைவர் நியமனம்..!

NIA
NIA

புதுதில்லி : கடந்த 2011 செப்டம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். அதன்பிறகு உருவாக்கப்பட்ட அமைப்பே NIA எனப்படும் தேசுய புலனாய்வு அமைப்பு. இந்த புலனாய்வு அமைப்பின் புதிய டைரக்டர் ஜெனரலாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காவல்த்துறை இயக்குனர் ஜெனரல் டிஜிபியாக தினகர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பஞ்சாப் முன்னாள் காவல்துறை அதிகாரி ஆவார்.


கடந்த ஆண்டு மே மாதம் ஒய்.சி மோடி ஓய்வுபெற்றார். அப்போது மத்திய ரிசர்வ் படையின் டைரக்டர்  ஜெனரலாக இருந்த குல்தீப் சிங்கிற்கு தேசிய புலனாய்வு அமைப்பின் கூடுதல் இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.நேற்று பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையின்படி பஞ்சாப்பை சேர்ந்த 1987பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான தினகர் குப்தாவை அமைச்சரவையின் நியமனக்குழு NIA உயர்மட்ட பதவிக்கு பரிந்துரைத்தது.



பணியாளர் அமைச்சக உத்தரவின்படி தற்போது நியமிக்கப்பட்டுள்ள தினகர் குப்தா 2024 மார்ச் 31 வரை அல்லது அவர் ஓய்வுபெறும்வரை அல்லது அடுத்த உத்தரவு வரும்வரை பதவியில் தொடர்வார். மேலும் இதில் ஏதேனும் ஒன்று முன்னதாக அதுவரை தேசிய புலனாய்வுத்துறை தலைவராக நீடிப்பார். இவர் காவல்துறை நிர்வாகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில பயங்கரவாத எதிர்ப்பு படையான (ATS) பஞ்சாப் மாநில புலனாய்வுப்பிரிவு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கட்டுப்பாட்டு பிரிவான OCCU  ஆகியவற்றை உள்ளடக்கிய பஞ்சாப் புலனாய்வுப்பிரிவின் தலைமை இயக்குனராக தினகர் குப்தா இருந்துள்ளார். இவர் மிகுந்த அனுபவசாலி மற்றும் திறமைமிகுந்தவர் என சக அதிகாரிகளால் பாராட்டப்பட்டவர். 

2004 ஜூன் முதல் 2012 வரை எட்டாண்டுகள் மத்திய புலனாய்வு அமைப்புகளில் பணிபுரிந்துள்ளார். இந்த காலகட்டத்தில் விவிஐபிக்களின் பாதுகாப்பை கவனிக்கும் புலனாய்வுப்பிரிவின் தலைவராக இருந்துள்ளார். பல முக்கியமான பணிகளையும் மேற்கொண்டுள்ளார். தினகர் குப்தா 1992 மற்றும் 1994 இரண்டு ஆண்டுகளும் காவல்துறைக்கான வீரப்பதக்கத்தை பெற்றுள்ளார். 

காவல்துறையில் சிறந்த சேவை புரிந்ததாக காவலர் பதக்கம் மற்றும் சிறப்பான சேவைக்கான பதக்கம் என இரண்டு பதக்கங்களை குடியரசுத்தலைவர் கையால் வாங்கியுள்ளார். 1999ல் லண்டனில் அமைந்துள்ள லண்டன் ஸ்கூல் ஆப் காமெர்ஸில் பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் பிரிட்டிஷ் செவெனிங் குருகுல் உதவித்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.