24 special

அவர்களை இங்கு அனுப்புங்கள்..! மமதா பானெர்ஜி காட்டம்..!

Mamata banerjee
Mamata banerjee

மேற்குவங்கம் : குடியரசுத்தலைவர் தேர்தல்  இந்த நேரத்தில் மஹாராஷ்டிரா அரசியலில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்தில் பிஜேபி செயல்பட்டு வருகிறது என மமதா பானர்ஜி அதிரடியாக குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அவர்களை இங்கு அனுப்புங்கள் சிறந்த முறையில் கவனிக்கிறோம் என மிரட்டல் தொனியில் பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


மேற்குவங்க தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி "நாட்டின் கூட்டாட்சி அமைப்பை மத்திய அரசு முற்றிலும் நசுக்கிவிட்டது என்பது துரதிர்ஷ்டமான உண்மை. பிஜேபி மகாராஷ்டிரா மாநில அரசை அரசியலைப்புக்கு விரோதமாக செயல்பட்டு கவிழ்க்க பிரயத்தனப்பட்டு வ்ருகிறது. இது நாட்டின் மாநில அமைதியை குலைக்கும் முயற்சி.

தற்போதுள்ள அரசியல் நிலைமை அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. மஹாராஷ்டிரா மக்களுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும் நீதி கிடைக்கவேண்டும். எம்.எல்.ஏக்களை ஏன் அங்கு அனுப்புகிறீர்கள். வெள்ளத்தால் அஸ்ஸாம் அரசு பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் இங்கு அவர்களை அனுப்புங்கள். 

மேற்குவங்கத்திற்கு அவர்களை அனுப்பினால் நாங்கள் நல்லமுறையில் விருந்தோம்பல் செய்வதோடு ஜனநாயகத்தையும் காப்பாற்றுவோம்" என உள்ளர்த்தத்துடன் மமதா செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் மஹாராஷ்டிரா சிவசேனா அரசின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த செவ்வாய் அன்று குஜராத்தில் இருந்து கவுஹாத்திக்கு சென்றனர். 

முதலில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 22 பேர் என சொல்லப்பட்ட நிலையில் கவுகாத்தி விமானத்தில் பணியாளர்கள் உட்பட 89 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. இதுவரை அதிருப்தி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாமல் சிவசேனா திணறி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவசேனாவில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட மறுநாளே அதிருப்தி எம்.எல்.ஏக்களால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால் சிவசேனாவின் காங்கிரஸ்தனமான போக்கு மற்றும் கூட்டணி கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஷிண்டே உள்ளிட்ட மற்ற தலைவர்களை மதிப்பதில்லை எனவும் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் பேச இவர்கள் தலைமையை நெருங்கவிடுவதில்லை எனவும் அதிருப்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.