
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கு இன்னும் 12 மாதங்கள் கால இடைவெளி உள்ளது. ஆனால், இப்போதே தமிழ்நாட்டில் அரசியல் களம் அதிரத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தற்போது தான் விரிசல் விட தொடங்கியுள்ளது. மேலும் திமுக அரசின் மீது நம்பிக்கையையும் இழந்துவிட்டார்கள் தமிழக மக்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் பால்விலை மின்சார கட்டணம்,மற்றும் சொத்து வரி அதிகரிப்பு,அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் என மக்களை பாடாய் படுத்தி வருகிறார்கள்.. விலையேற்றம் ஒருபுறம் என்றால் போதை பொருள் புழக்கம் அதிகமாகி இளைஞர்களை சீரழித்து வருகிறது
தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை மறைக்க மத்திய பா.ஜ.க. அரசு மீது குறைகளை பொய்யான குறைகளை கூறி மடைமாற்றி வரும் செயலில் இறங்கியுள்ளது திமுக ஆனால் திமுகவின் பொய்யான கருத்துக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும் ஆதரங்களுடன் உடனடியாக பதில் அளித்து வருவதால், திமுகவின் பிம்பத்தை உடைத்து வருகிறார். பா.ஜ.க. - தி.மு.க. இடையே மோதல் போக்கு உச்சம்பெற தொடங்கியிருக்கிறது.பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய கட்டிட செங்கல்லை ஒவ்வொன்றாக எடுப்பேன்' என கூறி அதற்காக உழைத்து வருகிறார்.
குறிப்பாக தமிழகத்தில் தற்போதைய நிலை தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது/ ஆனால் ஆளும் திமுக அரசு விளம்பரம் சீய்த்தும் ஊடங்கங்கள் மூலம் விளம்பரப்படுத்தி தன் தவறுகளை மறைத்து வருகிறது.ஆனால் அதையும் மீறி திமுகவின் ஊழல்களை மக்கள் முன் வைத்து வருகிறார் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை . தமிழக அரசியலில் தற்போது “அண்ணாமலை” என்கிற நபர் தமிழக அரசியலை புரட்டி போட்டுள்ளார்.
திமுகவினர் நேரடியாக அண்ணாமலையுடன் சண்டை செய்ய ஆரம்பித்துவிட்டர்கள்.விஜய் ,அதிமுக எடப்பாடி ,என வேறு எந்த கட்சியை பற்றியும் கவலைப்படாமல் இருந்த திமுகவினருக்கு தமிழக பாஜகவின் செயல்பாடுகள் இடியை இறக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் அவ்வப்போது அறிக்கை விட்டும் ஏதோ சினிமா படத்தில் வசனம் பேசுவதுபோல் பேசி அரசியல் செய்து வருகிறார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தினமும் பேட்டி, கருத்து என்று திமுகவை விமர்சித்து வருகிறார். ஆனால் அனைவரையும் தாண்டி அண்ணாமலையின் அரசியல் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி பாஜக தான் என தமிழக மக்களே கூற ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் அண்ணாமலை மீது இளைஞர்கள் அதிகமாக நம்பிக்கையில் உள்ளார்கள்.
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருக்கப்பபோவது இளைஞர்கள் தான். இளைஞர்களையும், முதல் தலைமுறையினரையும் எப்படி கவர்வது என அனைத்து கட்சிகளும் வியூகங்கள்அமைத்து வருகிறது. அதற்காக திமுக உதயநிதியை தயார்செய்து வருகிறது. விஜய் கட்சி பற்றி சொல்ல தேவையில்லை சீமானும் இளைஞர்களை கவர்வதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். ஆனால் அதிமுகவில் இது பெரிய பிரச்னைகளை உருவாக்கியுள்ளது.. இளைஞர்களை கவர என்ன முயற்சி எடுத்தாலும் அதிமுகவிற்கு பலன் கிடைப்பதில்லை.
இந்த நிலையில் தமிழகத்தில் இளைஞர்களை கவர்நது வருகிறார் அண்ணாமலை மேலும் தமிழக பாஜகவுடன் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே அதிமுகவால் இளைஞர்கள் ஓட்டுக்களை பெற முடியும் ம் இத்தேர்தல் வாக்குறுதிகளும் இளம் தலைமுறையினரை மையப்படுத்தியே அமையும் என்பதிலும் மாற்றம் இல்லை. எனவே அண்ணாமலை மாற்றும் திட்டம் ஏதும் டெல்லியில் இல்லையாம். மேலும் ஆளும் தரப்பு அண்ணாமலையின் பிம்பத்தை உடைக்க தமிழக ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்ட அசைமென்ட் தான் மாற்றம் என்ற செய்தி என தெரியவந்துள்ளது. மேலும் மோடி தமிழகம் வந்து சென்ற பிறகு அண்ணாமலை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என டெல்லி வட்டாரம் தெரிவித்துள்ளது.