மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஷாரிக். கோவையில் தங்கி சதி திட்டம் தீட்டி உள்ளதாகவும், அவனது சிம் கார்டு வாங்கிய விலாசத்தை விசாரித்ததில். ஊட்டி ஆசிரியர் ஒருவடையது என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதால் ஆசிரியரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டுவெடிப்பில் ஈடுபட்ட ஷாரிக் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்துள்ளான் மேலும் அதே வீட்டில் சுரேந்திரன் என்ற பள்ளி ஆசிரியரும் தங்கி இருக்கிறார். அப்பொழுது சுரேந்திரனின் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஷாரிக் சிம்கார்டு வாங்கி உள்ளான். தனிப்படை போலீசார் சுரேந்திரனை கோவை அழைத்து வந்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் ஷாரிக்கும் சுரேந்திரனுக்கும் உள்ள தொடர்பு என்ன? ஒன்றாக சதி திட்டம் தீட்டினார்களா என தெரிய வரும் என்றும், மேலும் ஷாரிக் கோவையில் தங்கி இருந்து, கோவை கார் குண்டுவெடிப்பில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய ஜமிஷா மொபைனுடன் உள்ள தொடர்புகள் பற்றியும் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷாரிக்கின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்ததில் அவர் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதும் போலீசு சார்பில் உறுதியாகி உள்ளது.
கோவை குண்டுவெடிப்பை தொடர்ந்து ஏற்கனவே தமிழகம் முழுவதும், NiA மற்றும் இணைந்து பல நூறு இடங்களில் சோதனை நடத்தி சிம்கார்டுகள், ஐஎஸ் தொடர்புடைய ஆவணங்கள், லேப்டாப்புகள் என கைப்பற்றி பலரை கைது செய்துள்ள சூழ்நிலையில் மங்களூர் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட ஷாரிக்கின் கோவை தொடர்புகள் மிகப்பெரிய சதி திட்டத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது, தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இரண்டு மாநிலங்களிலும் உள்ள போலீசார் தீவிர சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Gokulakrishnan S