24 special

தயவுசெய்து கோவில் உண்டியலில் பணத்தை போடாதீங்க...பொன்மாணிக்கவேல் சொன்ன அதிர்ச்சி காரணம்!

Ponmanikavel
Ponmanikavel

திண்டுக்கல் மாவட்டதில் உலக சிவனடியார்கள் கூட்டம் மற்றும் உழவார பணிக்குழுவை சேர்ந்தவர்களுக்கு ஐடி கார்டு வழங்கும் விழா கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியார்கள் சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. 


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐஜி பொன்மாணிக்கவேல், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சாமி தரிசனத்துக்காக செல்லும் பக்தர்கள் உண்டியலில் பணத்தை காணிக்கையாக செலுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் உண்டியலில் செலுத்துவதற்கு பதிலாக வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அர்ச்சகர்களுக்கு அந்த பணத்தை கொடுக்கலாம். கோவில்களில் சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டால் தான் அந்த சிலைகள் உருவாக்கப்பட்டதற்கான பலன் இருக்கும்.  

கோவில்களில் இருந்து திருடப்பட்ட சுவாமி சிலைகளை அரசு மீட்டெடுத்துள்ளது அந்த சிலைகள் இன்னும் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு திரும்ப ஒப்படைக்காமல் அருங்காட்சியங்களில் காட்சிப்பொருளாக உள்ளது. 

சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் 20500 க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் காட்சி பொருளாக இருக்கிறது, அந்த சிலைகளை எல்லாம் அந்தந்த கோவில்களுக்கு திரும்ப ஒப்படைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அருங்காட்சியகலில் சுவாமி செய்திகளை வைத்திருப்பது தமிழகத்தில் உள்ள ஆன்மீக உணர்வாளர்கள் அனைவரின் மனதை புண்படுத்தும் செயலாகும். அருங்காட்சியத்தில் இல்லாமல் மக்கள் வழிபடும் கோவில்களில் சுவாமி சிலைகள் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நீண்ட கால கோரிக்கையாகும் என பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.

ஏற்கனவே தனது முந்தைய பேட்டிகளில் சுவாமி விக்ரகங்கள் மட்டும் காவல் காணாமல் போகவில்லை. கோவிலிலே காணாமல் போய் உள்ளது என்று கூறியிருந்தது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Gokulakrishnan S