தமிழக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி தற்பொழுது 2015 இல் மூடப்பட்ட இவரது வழக்கால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதத்தையும் பெற்றுள்ளார். அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான வழக்கில் இந்த தீர்ப்பு வெளியானதை வரவேற்பதாக அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இப்படி தொடர்ந்து திமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் ஊழல்களின் சிக்கி சிறை தண்டனை பெற்று வருவது திமுகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது அதே சமயத்தில் பாஜக 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் வைத்து மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவர்களுக்கு சாதகமாக மாறி வருகிறது அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் மேற்கொள்ளப்பட்டு வரும் என் மண் என் மக்கள் நடைபயணம் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறது.
இதனை அடுத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்ணாமலையை காண்பதற்கு டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார் இதை அடுத்து டெல்லி விரைந்து அண்ணாமலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் இவருடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகனும் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் நிலவரம் குறித்தும், இன்னும் நான்கு மாதங்களில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடவுள்ள தொகுதிகளின் கள நிலவரங்களை குறித்தும் கேட்டறிந்துள்ளார். அதுமட்டுமின்றி தற்போது தமிழகத்தின் தென் மற்றும் வட மாவட்டங்களை பெரிதளவில் தாக்கிய கனமழை குறித்தும் மக்களின் நிலவரத்தை குறித்தும் வெள்ள பாதிப்பு எந்த அளவிற்கு ஏற்பட்டுள்ளது என்பதை குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து பாஜக நிர்வாகிகளிடம் கேட்ட பொழுது வேற மாதிரியாக கூறியுள்ளனர் அதாவது இனிவரும் காலங்களில் தமிழகத்தில் அதிரடியான அரசியல் செய்ய வேண்டியதாக இருக்கும் தயாராக இருங்கள் மேலிடத்தில் கூறிய தகவலையே தற்போது கூறி உள்ளேன் என மேலிடத்திலிருந்து வந்த தகவலை நிர்மலா சீதாராமன் அண்ணாமலை இடம் தெரிவித்துள்ளதாக சில கமலாலய முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்.
இதற்கு அடுத்தபடியாகவே செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசு மத்திய அரசின் மீது தேவையில்லாமல் பழியை போட்டு தப்பிக்க பார்க்கும் விஷயத்தை எடுத்துரைத்துள்ளார். அதாவது எங்களிடம் நிதி அனுப்புங்கள் நிவாரணத்தொகை வேண்டும் என்று முதல்வர் கேட்கிறார் அதற்கான தகவலை நாங்கள் அவருக்கு அனுப்பும்போது அவர் டெல்லியில் இருக்கிறார் ஆனால் அதற்கு முன்பாகவே நிதி குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டது என்றும், மக்களின் மீது அக்கறை இருந்தால் அவர் ஏன் மக்களை காணாமல் டெல்லியில் தனது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை இடுகிறார் இதன் மூலமே அவருக்கு என்ன முக்கியம் என்பது புலப்படுகிறது என்றும், மழை வருவதற்கு முன்பு 92% முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடிந்து விட்டது என்று கூறிய அமைச்சர் பாதிப்பு அடைந்த பிறகு 42% தான் 4000 கோடியில் செலவழிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 92 மற்றும் 42 இருக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு அமைச்சர் தமிழகத்தில் தான் இருக்கிறார் என்றும், பாதிக்கப்பட்ட பகுதியில் அமைச்சர்கள் ஏன் ஒருவர் கூட இல்லை என்ற சரமான கேள்வியையும் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலடியையும் கொடுத்துள்ளார். அப்படி நிதியமைச்சர் கொடுத்த பதிலடி ஒவ்வொன்றுமே சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் வேறு வரும் காலங்களில் பாஜக தமிழகத்தில் தீவிர அரசியலில் ஈடுபடும் என பார்க்கப்படுகிறது.