திமுக தனக்கு கீழ் பல பேச்சாளர்களை வைத்து எதிர்க்கட்சிகள் அனைவரையும் விமர்சனம் செய்து வருகிறது என்றும் அப்படி சிலர் பேச்சாளர்களும் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் திமுகவிற்கு சாதகமான கருத்துக்களையும் திமுகவை எதிர்த்து எவரேனும் கேள்வி கேட்டால் அவர்களுக்கு எதிரான பலம் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து திமுகவிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் பலரைக் கூற முடியும் சிலர் பத்திரிகையாளராக இருந்தும் திமுகவின் கட்சிக்கு ஆதரவுக்கான கருத்துக்களை தெரிவிக்கும் youtube சேனல்களை தொடங்கி பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அவர்களின் முக்கிய வேலையே திமுக விற்கு ஆதரவாக பேசுவது, பாஜகவை எதிர்ப்பது, திமுகவிற்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பினால் அவர்கள் குறித்து தேவையில்லாத கருத்துக்களை பரப்புவது என இணையத்தில் பல செயல்கள் நடைபெறுவதாக அரசியல் விமர்சகர்களே கூறும் அளவிற்கு நடக்கிறது.
அந்த வகையில் ஒரு பெண் பேச்சாளரான மதிவதனி திமுகவிற்கு ஆதரவான கருத்துக்களை எங்கும் தெரிவித்து வருவார் அதாவது ஏதேனும் youtube பேட்டி என்றாலும் சரி மேடைப்பேச்சு என்றாலும் சரி எங்கும் எதிலும் திமுக என்பது போன்று அனைத்திலும் திமுகவிற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருவார். ஆனால் அப்படி இவர் கூறும் சில கருத்துக்கள் திமுகவிற்கு சில நேரங்களில் விமர்சனங்களை பெற்று தருகிறது. அதாவது ஒரு முறை, மதிவதனி மேடை பேச்சில் இன்றைய காலகட்டத்தில் பல இணையதளங்கள் செயல்கள் உள்ளது இவற்றின் மூலம் பலர் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இதே போன்ற ஒரு செயலிகள் தொழில்நுட்பம் நிறைந்த உலகம் கலைஞர் இறந்த காலத்திலிருந்து இருந்தால் அவரும் தனது கருத்தை பரவலாக முன்வைத்து அதிக ரசிகர்களை பெற்றிருப்பார் என்று பேசினார்.
இன்னும் தெளிவாக கூற போனால் இன்றைய காலத்தில் இருக்கும் டிவிட்டர் கலைஞர் இருக்கும் காலத்தில் இருந்திருந்தால் அதில் பல கருத்துக்களை கலைஞர் பதிவேற்றிருப்பார் அவற்றை பலரும் பார்த்து கலைஞருக்கு ரசிகர்களாக மாறியிருப்பார்கள் என்ற கருத்தை முன் வைத்திருந்தார் இதற்கு பல விமர்சனங்கள் எழுந்தது ஏனென்றால் கலைஞர் இருந்த பொழுதும் ட்விட்டர் இருந்தது ட்விட்டரில் கலைஞர் இருந்துள்ளார் என்பது தெரியாமல் திமுகவை ஆதரித்து பேச வேண்டும் என்ற நோக்கில் ஏதோ ஒரு கருத்தை கூறிக் கொண்டிருக்கிறார் மதிவதனி என கமெண்ட்கள் பறந்தது. இந்த நிலையில், இதே போன்ற சற்று யோசிக்காமல் ஒரு தவறான கருத்தை முன்வைத்து பல விமர்சனங்களை பெற்று வருகிறார்.
அதாவது உங்களில் யார் முதல் எழுத்தாளர் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மேடைப்பேச்சு கலந்து கொண்ட மதிவதனி, எட்கேடுவானா என்கின்ற பெண்தான் முதல் பெண் எழுத்தாளர் என்று கூறி யார் இந்த எட்கேடுவானா என்றால் கிறிஸ்து பிறப்புக்கு முன் கிமு 23 ஆம் ஆண்டில் பிறந்தவர். அப்போ நமக்கும் அவர்களுக்கும் எவ்வளவு வருடம் வித்தியாசம் உள்ளது என்றால் 4300 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் எட்கேடுவானா என்று பேசி இருந்தார் ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, கிமு 23ஆம் ஆண்டிற்கும் 2023 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலம் என்பது 2046 ஆண்டுகள் மட்டுமே! ஆனால் இவர் 4300 ஆண்டுகள் என்று கூறியுள்ளார் அதையும் இனையவாசிகள் கண்டறிந்து கி.மு.23-ஆம் ஆண்டுக்கும், கி.மு.23- ஆம் நூற்றாண்டுக்கும் வேறுபாடு தெரியாத திராவிட தற்குறி மதிவதனி என இணையதளங்களில் இவரை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். இப்படி கிமு - கிபி யின் வித்தியாசம் தெரியாமலேயே மேடையில் திமுக பேச்சாளர் உளறிக் கொட்டியது இணையத்தில் வைரலாகி வருகிறது.