நாடாளுமன்றத்தில் தமிழகத்தைசேர்ந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரை எங்க ஓடுறீங்க நின்னு கேட்டுட்டு போங்க.. அப்படி ஓடினாலும் போயி டிவியில் பாருங்க என நாடாளுமன்றத்தில் திமுகவினரை விரட்டி அடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 3வது நாளாக மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார்.
அப்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம் என நிர்மலா சீதாராமன் கூறினார். நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசால் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதால் கட்டுமானம் தாமதமாகியுள்ளது என்றும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை கொடுக்கவேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கட்டிக்கொடுப்பதால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை இல்லை என்று பேசிய நிர்மலா சீதாராமன், ஜப்பான் நிறுவனத்தின் கடன் மூலம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக கட்டப்படும் என்று அடித்து தெரிவித்தார்.
இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நிர்மலா சீதாராமன் தவறான தகவல்களை தருவதாக திமுக எம்.பி.க்கள் கூச்சல் போட்டனர் அத்துடன், மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
அப்போது நான் உண்மையை சொல்றேன் இன்னம் தமிழகத்தில் நடப்பது குறித்து சொல்றேன் எங்க ஓடுறீங்க கேட்டுட்டு போங்க ஓடுனா எப்படி? அப்படி ஓடுனாலும் போயி டிவியில் பாருங்க என வெளுத்து எடுத்தார் நிர்மலா சீதாராமன்.தமிழகத்தில் நாங்கள் நாடாளுமன்றம் சென்றால் பாஜகவினரை நிற்க வைத்து கேள்வி கேட்போம் என பேசிய திமுக எம் பி கள் பலர் நிர்மலா சீதாராமன் பதில் கொடுக்கையில் பாதியில் ஓட்டம் எடுத்த சம்பவம் கடும் கிண்டலை உண்டாக்கி இருக்கிறது.