24 special

1.72 கோடி ரூபாய் விவகாரத்தில் மொத்தமாக சிக்கிய பினராயி விஜயன் குடும்பம்...!

Pinarayi vijayan, veena vijayan
Pinarayi vijayan, veena vijayan

கேரள மாநிலம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினராக உள்ளார் மேலும் இவர் கேரள மாநிலத்தின் முதலமைச்சராகவும் தற்போது இருந்து வருகிறார்.  இந்த நிலையில் தேசிய அளவில் ஆளுங்கட்சியை எதிர்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்த இண்டியா அமைப்பிலும் பினராயி விஜயன்  இடம்பெற்றுள்ளார். 


தற்போது பினராயி விஜயன்  மகள் வீணா விஜயன் ஒரு சர்ச்சையில் சிக்கி இருப்பது கேரளா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வீணா எலெக்சாக்ஸின் சொல்யூஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனம் CMRL க்கு பிராந்திய தகவல் தொழில்நுட்பம் சந்தைப்படுத்துதலின் ஆலோசனைகள் மற்றும் மென்பொருள் சேவைகளை வழங்க ஒப்பந்தம் செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்தம் செய்யப்பட்ட படி எந்த ஒரு சேவையும் வீணா நிறுவனத்திடம் இருந்து பெறப்படவில்லை என்று வருமானவரித்துறை கூறியுள்ளது. 

அதாவது 2016 டிசம்பர் மாதத்தில் CMRL உடன் வீணாவின் நிறுவனம் ஐடி மற்றும் சந்தைப்படுத்துதல் என ஆலோசனை சேவைகளுக்காக ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் மேலும்  2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வீணாவின் எக்ஸ்லோஜிக் உடன் மென்பொருள் சேவைகளுக்கான புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்படி எக்ஸலாஜிக் நிறுவனம் மற்றும் வீணா ஒவ்வொரு மாதமும் 5 லட்சம் ரூபாய் பெற்றதோடு தலா மூன்று லட்சம் ரூபாயும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கணக்குகளின் படி கிட்டத்தட்ட வீணா மற்றும் எக்ஸாலாஜிற்கு மொத்தமாக 1.72 கோடி பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டில் CMRL அலுவலகம், தொழிற்சாலை, எம்டி மற்றும் அதன் முக்கிய அதிகாரிகளின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்திய பொழுது பாரிய வரி ஏய்ப்பில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், 2013 - 2014 முதல் 2019 - 2020 வரையில் செலுத்தப்பட்ட வரி ஆவணங்கள் அடிப்படையிலான தேடல்கள் நடத்தப்பட்டதாகவும் வருமானவரித்துறை தரப்பில் கூறப்படுகிறது. 

இதற்கு அடுத்ததாக CMRL நிர்வாகத்தின் இயக்குனர் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு அளித்த அறிக்கையில் முன்பு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி வீணா மற்றும் அவரது நிறுவனத்திற்கு மாதம் பணம் செலுத்தப்பட்டது மற்றும் CMRL லின் தலைமை பொது மேலாளர் மற்றும் தலைமை நிதி அதிகாரிகள் இதற்கு ஏற்ற வகையில் சாட்சி அளித்துள்ளனர். அதாவது வீணா மற்றும் அவரது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள எந்த சேவையும் தங்களுக்கு தெரியாது என்று சாட்சி அளித்துள்ளனர். இதற்கிடையில் CMRL நிர்வாக இயக்குனர் இந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு வீணாவின் நிறுவனத்துடன் எந்த பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் வருமான வரித்துறை தனது வாதத்தில் உறுதியாக நிற்க, இது ஒரு சட்டவிரத பரிவர்த்தனை என்று வருமான வரித்துறைப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதம் நீதிபதிகள் அம்பரபாலி தாஸ், ரமேஷ் வர்சிங் மற்றும் எம் ஜெகதீஷ் பாபு ஆகியோர் அடங்கிய தீர்வில் முன்வைக்கப்பட்ட நிலையில், வழங்கப்படாத சேவைகளுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக வருமானவரித்துறையால் கூறப்படுகிறது என்று கூறியுள்ளனர் இந்த சர்ச்சை கேரள முதல்வருக்கு அரசியல் ரீதியாக விமர்சனங்களை பெறுவதற்கான வாய்ப்பாக இருக்கும் என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் இந்த வழக்கு அமலாக்க துறையிடம் செல்லும் எனவும், விரைவில் இது மிகப்பெரிய விஸ்வரூபத்தை எடுக்கும் இதன் மூலம் கேரளா அரசியலில் மாற்றம் ஏற்படும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இது நடந்தால் இந்தியா கூட்டணியில் விழப்போகும் அடுத்த மிகப்பெரிய அரசியல் விக்கெட் பினராயி விஜயன்  என்பதையும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.