இந்துக்கள் எவ்வாறு காஷ்மீரில் இன படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை விவரிக்கும் திரைப்படம்தான் காஷ்மீர் பைல்ஸ்(the kashmir files ) இந்த திரைப்படம் தற்போது பல உண்மைகளை உலகிற்கு கொண்டுவந்துள்ளது இந்த சூழலில் இந்த சம்பவம் நேற்றைய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.
இடைவேளைக்கு பிறகு நாடாளுமன்றம் கூடிய நேரத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன், "காஷ்மீரில் இந்துக்கள் கொல்லப்பட்டதை மறைக்கும் விதமாக காங்கிரஸ் எப்படி அறிக்கை விடலாம்? காஷ்மீர் ஃபைல்ஸ் சொல்லும் உண்மைகளை ஏன் மறைக்க முயற்சிக்கிறது காங்கிரஸ்?
அங்கே இந்துக்கள் கொல்லப்பட்ட போது, நிலைமையை சரி செய்யாமல், லண்டன் டூர் போய் விட்டார் முதல்வர் அப்துல்லா. 'நாம் நடவடிக்கை எடுத்தால் நண்பர் (அப்துல்லா) வருத்தப்படுவார்' என்று பிரதமர் (ராஜீவ் காந்தி) நடவடிக்கை ஏதும் எடுக்காமல், 'இந்துக்கள் சாகட்டும்' என்று விட்டுவிட்டார்.
அதோடு நின்றதா என்றால் இல்லை. 'இத்தனை இந்துக்களை கொன்றேன்' என வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு (பிபிசி) பேட்டி கொடுத்தவரை (யாசின் மாலிக்) டில்லிக்கு அழைத்து கௌரவப்படுத்தினார் பின்னாள் காங்கிரஸ் பிரதமர் (மன்மோகன் சிங்)." என்று அடித்து தொங்க விட்டார் காங்கிரஸ் கட்சியை.
காஸ்மீரில் இந்துக்களுக்கு செய்த பாவத்தின் பலனை தான் தற்போது காங்கிரஸ் கட்சி அறுவடை செய்து கொண்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது ஏற்கனவே 5 மாநிலத்திலும் தோல்வியை தழுவிய காங்கிரஸ் இப்போது நாடாளுமன்றதிலும் நிதி அமைச்சரிடம் அடி வாங்கியுள்ளது.