24 special

பிரதமரிடம் தமிழ்நாட்டிற்கு உடனடியாக "4 " மனநல மருத்துவ மனை கேட்ட எழுத்தாளர் இதை தான் நக்கல் என்பதா?

modi and stallin
modi and stallin

தமிழகத்தை சேர்ந்த தொழிற்சங்க செயற்பாட்டாளரும் அறிவியல் எழுத்தாளருமான இளங்கோ பிச்சாண்டி என்பவர் பிரதமரிடம் கோரிக்கை ஒன்றை தனது சமூக வலைத்தளம் மூலமாக வைத்துள்ளார் அது ஏன் எதற்கு என அவர் நீண்ட விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளார் அது பின்வருமாறு :-


உபி மாநிலத்தில் நடந்த  நான்கு தேர்தல்களைப் பார்ப்போம். 2007, 2012, 2017, 2022 ஆகிய 4 தேர்தல்களைப் பார்ப்போமா? உபி சட்டப் பேரவையில் 403 இடங்கள். பெரும்பான்மைக்குத் தேவை 202 இடங்கள்.

2007ல் 7 கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.07.04.2007 முதல் 08.05.2007 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் 11.3 கோடி. வாக்குப் பதிவு = 45.96 சதவீதம்.      இத்தேர்தலில் மாயாவதி முதல்வர் ஆனார்.முலாயம் சிங்கிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றினார்.மாயாவதி 206 இடங்களை வென்றார். பெற்ற வாக்குகள்30.43 சதவீதம். 

2012லும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.பெப்ரவரி 8 முதல் மார்ச் 3 வரை 7 கட்டத் தேர்தல்.59.40 சதவீதம் வாக்குகள் பதிவாயின.இத்தேர்தலில் அகிலேஷ் யாதவ் முதல்வர் ஆனார்.மாயாவதியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றினார் அகிலேஷ். 224 இடங்களை சமாஜ்வாதி கட்சி வென்றது. பெற்ற வாக்குகள் 29.15 சதவீதம் ஆகும்.   

2017 தேர்தல் முந்திய தேர்தல்களைப் போலவே பெப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் 14.05 கோடி.வாக்குப் பதிவு 61.24 சதவீதம்.இத்தேர்தலில் பாஜகவின் யோகி ஆதித்யநாத்முதல்வர் ஆனார். அகிலேஷ் யாதவ்விடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றினார். பாஜக 312 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 39.67 சதவீதம். 

2022 தேர்தலும் முந்திய தேர்தல்களைப் போலவே  பெப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் 15 கோடி. பதிவான வாக்குகள் 60.8 சதவீதம்.  இத்தேர்தலில் பாஜகவின் யோகி ஆதித்யநாத்ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார்.பாஜக 255 இடங்களில் வென்றது. பெற்ற வாக்குகள் 41.29 சதவீதம்.

இது முந்தைய 2017 தேர்தலில் பாஜக பெற்றதை விட 1.62 சதவீதம் அதிகம்.பாஜகவின் 255 இடங்கள் மற்றும் அதன் கூட்டணிக்  கட்சிகளான அப்னா தளம் (சோனேலால்)  12 இடங்கள் மற்றும் நிஷாத் கட்சி 6 இடங்கள் என்று மொத்தம் 273 இடங்களில் பாஜக கூட்டணி  வென்றுள்ளது. இது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை விட அதிகம் ஆகும்.

 2007ல் மாயாவதி முதல்வராகும்போது அவரின் கட்சி பெற்றது 30.43 சதவீதம் வாக்குகள்.2012ல் அகிலேஷ் யாதவ் முதல்வராகும்போது அவரின் கட்சி பெற்றது 29.15 சதவீதம் வாக்குகள்.2017ல் யோகி ஆதித்யநாத் முதல்வராகும்போது அவரின் கட்சி பெற்றது 39.67 சதவீதம் வாக்குகள்.

2022ல் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகும்போது அவரின் கட்சி பெற்றது 41.29 சதவீதம் வாக்குகள். இத்தேர்தலில் கோரக்பூர் அர்பன் தொகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற யோகி ஆதித்யநாத் தமக்கு அடுத்தபடியாக வந்த சமாஜ்வாதி வேட்பாளரை ஒரு லட்சத்து மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இத்தேர்தலில் அசாதுதீன் ஒவாய்ஸியின் மஜ்லிஸ் கட்சி போட்டியிட்டது. ஒன்றிலும் வெற்றி பெறவில்லை.மொத்த வாக்குகளில் 0.49 சதவீத வாக்குகளை மட்டுமே இக்கட்சி பெற்றது. இது பெற்ற வாக்குகள் நாலரை லட்சம் ஆகும். மஜ்லிஸ் கட்சியால் யாருடைய வெற்றி வாய்ப்பும் பாதிப்புக்கு உள்ளாக்கவில்லை.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று தமிழ்நாட்டில்  ஒரு பழமொழி வழங்குகிறது. அதன்படி உபி மக்கள்அளித்த தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்றுக் கொள்ள  வேண்டும். உபியில் அகிலேஷும் மாயாவதியும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர். ஆனால் 

தமிழ்நாட்டில் உள்ள மூளை வளர்ச்சி குன்றிய  திராவிடக் கசடுகள் (Dravidian scum) EVMகளில் ஏதோ செய்து பாஜக வெற்றி பெற்று விட்டது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறான். தமிழ்நாட்டுக்கு  மட்டும் நாலு மனநல மருத்துவமனைகளை உடனடியாகக் கட்டித் தருமாறு பிரதமர் மோடி  அவர்களை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார் இளங்கோ பிச்சாண்டி.