மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகள் திருமணம் மிக மிக எளிமையான முறையில் நடைபெற்று இருப்பது ஆச்சர்யத்தை அளித்து இருப்பதுடன் சில கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.
மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன், பெங்களூரு ஜெயநகரில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இந்நிலையில், இவரது மகள் வாங்மயி மணமகன் ப்ரதீக் என்ற இருவருக்கும், பெங்களூரின் தனியார் ஹோட்டலில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் தொடங்கி தொழில் அதிபர்கள் யாருக்கும் அழைப்பு கொடுக்கவில்லை.
மணமக்கள் ஊர்வலம் உள்ளிட்ட எதுவும் நடைபெறவில்லை இது உண்மையில் பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது வழக்கமாக அமைச்சர்கள் வீட்டு திருமணம் என்றால் அதில் பல அரசியல் கணக்குகள் இருப்பதுடன் கொடி, பேனர், விஐபி வருகை என பல்வேறு அமர்க்களம் இருக்கும், மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு ஆடம்பர திருமணம் செய்வதுதான் வழக்கம்.
ஆனால், மத்திய அரசில் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கும் நிர்மலா சீதாராமன், இந்த திருமணத்தை எளிமையாக நடத்தியுள்ளார். உடுப்பி அதமாரு மடத்தின் தீர்த்த சுவாமிகள், ஈசபிரிய தீர்த்த சுவாமிகள் மணமக்களை வாழ்த்தி, கிருஷ்ணர் கோவில் பிரசாதம் வழங்கினர் திருமணம் எளிமையாக நடைபெற்று முடிந்தது.
திருமணம்தான் எளிமையாக நடைபெற்றது என்றால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் எளிமையாக நடத்தி அடுத்த ட்விஸ்ட் கொடுத்து இருக்கின்றனர் நிர்மலா சீதாராமன் குடும்பத்தினர்.மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பின்பற்றி இதே போல் மற்ற அரசியல் தலைவர்களும் தங்கள் வீட்டு விசேஷ நிகழ்வுகளை எளிமையாக நடத்தலாமே என்று இப்போது பொது மக்கள் மத்தியிலும் அடுகடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறது