24 special

இனி என்ன ஆக போகிறது...! முதல்வருக்கு மீண்டும் வந்த பிரச்சனை

Mk stalin,pm modi
Mk stalin,pm modi

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலானா பாஜக அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்தே சில விஷயங்களை ரகசியமாகவும், சில விஷயங்களை பொதுவெளியிலும் செயல்படுத்தி வருகிறது.பாஜக மாநில முதல்வர் பட்டியல் வரை அமைச்சரவை பட்டியல் என பாஜகவே அதிகார பூர்வமாக வெளியிடும் முன்னர் யாரும் இவர் தான் முதல்வர் இவர் தான் அமைச்சர் என்பதை கண்டறிய முடியாது. அப்படி இருக்கையில் மத்திய புலனாய்வு அமைப்புகள் எவ்வாறு செயல்படும் என்பதை யூகித்து கொள்ளலாம்.


அந்த வகையில் தான் டெல்லியில் இருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு இரண்டு சோக செய்திகள் கிடைத்து இருக்கிறது ஒன்று உலக அளவில் கோலோச்சிய BBC நிறுவனம் வசமாக மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் சிக்கி முழு தகவலும் வெளிவந்து இருக்கிறது.Bbc யின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. பிபிசி ஊழியர்களிடம் 60 மணிநேரம் வருமான வரித் துறை அதிகாரிகள் கேள்விகள் எழுப்பினர், 

இந்தியாவில் பிபிசி ஈட்டும் வருவாய்க்கான வரியை முறையாக செலுத்தவில்லை என்று புகார் எழுந்ததாகவும், அது தொடர்பாக இந்தச் சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும்  முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.பிபிசியின் வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த அதன் பிற இந்திய மொழி வருவாய் விவரங்களுடன் ஒத்துப்போகவில்லை. பிபிசி அதன் வருவாய் கணக்கிட்டதில் விதிகளைப் பின்பற்றவில்லை என்று தெரிகிறது” என்று வருமானத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

மோடி குறித்து ஆவணப்படம் வெளியானதையொட்டி, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனையை ஏவியுள்ளதாக மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.இந்நிலையில் தற்போது நிலவரம் தலைகீழாக மாறி இருக்கிறது, பிபிசி வரி ஏய்ப்பு செய்தது உறுதியாகி இருக்கிறது. இது குறித்து மத்திய வருமான வரித் துறை வட்டாரம் கூறுகையில் “வருமானத்தை மறைதி bbc வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டு இருக்கிறது தற்போது பிபிசி ஒப்புக்கொண்டுள்ளது என தெரிவித்து இருக்கிறது.

இதன் மூலம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது சரி என்பது உறுதியாகி இருக்கிறது. இங்கு தான் முதல்வருக்கு சிக்கல் எழுந்து இருக்கிறது, வருமான வரித்துறை எந்த ஆதாரமும் இல்லாமல் சோதனை நடத்துவது இல்லை என்பது உறுதியாகி இருப்பதால்.கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்வர் மகள் செந்தாமரை இல்லம், தனியார் கட்டுமான நிறுவனம், திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி இல்லம் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நடைபெற்ற  வருமான வரித்துறை சோதனைகள் போன்றவற்றில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை தூசி தட்ட தொடங்கி இருக்கிறதாம்.

அண்ணாமலை வெளியிட்ட திமுக பைல்ஸ் அடிப்படையில் சில ஆவணங்கள் தகவல்கள் சிபிஐ வரை சென்று இருப்பதாகவும் விரைவில் சிபிஐ களத்தில் இறங்கும் என முதல்வருக்கு டெல்லியில் இருந்து சோகமான செய்தி வந்து இருப்பதாக கூறப்படுகிறது.உலகம் முழுவதும் கோலோச்சும் பிபிசி ஊடகத்திற்கே இந்த நிலை என்றால்? திமுக அமைச்சர்களின் நிலை இனி என்ன ஆகும் என்ற கேள்வி தான் இப்போது திமுகவின் மேல்மட்ட நிர்வாகிகளுக்கு எழுந்து இருக்கிறதாம்.